/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கலெக் ஷன் மாஸ்டர்' விஜயேந்திரா துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
/
'கலெக் ஷன் மாஸ்டர்' விஜயேந்திரா துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
'கலெக் ஷன் மாஸ்டர்' விஜயேந்திரா துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
'கலெக் ஷன் மாஸ்டர்' விஜயேந்திரா துணை முதல்வர் சிவகுமார் ஆவேசம்
ADDED : டிச 19, 2025 05:02 AM

பெலகாவி: ''மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா 'கலெக் ஷன் மாஸ் டர்' அவரது தந்தை எடியூரப்பாவின் பெயருக்கு களங்கம் விளைவிப்பவர்,'' என, துணை முதல்வர் சிவகுமார் ஆவேசமாக கூறினார்.
பெலகாவியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாநில அரசின் கருவூலத்தை காலி செய்து, காங்கிரஸ் மேலிடத்திற்கு பணம் கொடுப்பதாக, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா கூறுகிறார். அவருக்கு அரசியலில் அனுபவம் இல்லை. எங்கு கருவூலம் காலியாக உள்ளது. அவருக்கு தைரியம் இருந்தால், இதுபற்றி சட்டசபையில் வந்து பேசட்டும். ஒடி ஒளிந்து கொள்ளக்கூடாது.
அவர் தான் கலெக் ஷன் மாஸ்டர். அவரது தந்தை எடியூரப்பாவின் பெயருக்கு க ளங்கம் விளைவிப்பவர். விஜயேந்திரா செய்யும் தொழில் பற்றி நான் பேசட்டுமா?. வாயை மூடி கொண்டு அவர் வேலையை பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயேந்திரா கூறியதாவது:
எட்டு மாதங்களாக சுதந்திர போராட்ட வீரர்களுக்கு கவுரவ தொகையை அரசு வழங்கவில்லை. இதற்கு என்ன காரணம். கருவூலம் காலியாகி விட்டது என்று தானே அர்த்தம். யாரோ ஒருவரை அடக்கி, ஒடுக்கி மிரட்டுவது போன்று, என்னை மிரட்ட முயற்சிக்க வேண்டும்.
நான் எம்.எல்.ஏ., மற்றும் பா.ஜ., எனும் தேசிய கட்சியின் கர்நாடக மாநில தலைவர். ஊழலை பற்றி சிவகுமார் பேசாமல் இருப்பது அவருக்கு நல்லது. மாநில அரசியலில் ஊழலின் தந்தை யார் என்று கேட்டால், சிவகுமார் என்று, அவரது கட்சியில் உள்ளவர்களே சொல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில், முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமாரை தனிப்பட்ட முறையில் விஜயேந்திரா விமர்சித்து பேசியது இல்லை.
காங்கிரசுடன் உள்ஒப்பந்த அரசியல் செய்வதாக, விஜயேந்திரா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ள நிலையில், முதல்முறையாக சிவகுமாருக்கு எதிராக விஜயேந்திரா பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

