/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோலார் மாவட்டத்தில் 148 போலி கிளினிக்குகள் வேரறுக்க கலெக்டர் எம்.ஆர்.ரவி சபதம்
/
கோலார் மாவட்டத்தில் 148 போலி கிளினிக்குகள் வேரறுக்க கலெக்டர் எம்.ஆர்.ரவி சபதம்
கோலார் மாவட்டத்தில் 148 போலி கிளினிக்குகள் வேரறுக்க கலெக்டர் எம்.ஆர்.ரவி சபதம்
கோலார் மாவட்டத்தில் 148 போலி கிளினிக்குகள் வேரறுக்க கலெக்டர் எம்.ஆர்.ரவி சபதம்
ADDED : அக் 25, 2025 11:02 PM
கோலார்: ''கோலார் மாவட்டத்தில் 148 போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றை தடுக்க அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, கலெக்டர் எம்.ஆர்.ரவி தெரிவித்தார்.
கோலார் மாவட்ட தனியார் மருத்துவமனை ஒழுங்குமுறை குழுவின் ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் பேசியதாவது:
மருத்துவ தகுதிகள் இல்லாமல் சட்டவிரோதமாக கிளினிக்குகள் நடத்தப்படுகின்றன. இத்தகையோர் மீது, கோலார் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. அண்மையில் ஏழு போலி மருத்துவமனைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் மூன்று மருத்துவமனைகளின் பதிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தீங்கு பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்படாத நான்கு மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் மருத்துவ சேவைகளை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவத் தகுதிகள் இல்லாமல் சிகிச்சை அளிப்பது, பொது சுகாதாரத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
போலி மருத்துவமனைகளை வேரறுக்க மாவட்ட நிர்வாகம் உறுதி பூண்டுள்ளது. சுகாதார துறையுடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோலார் மாவட்டத்தில் இதுவரை, 148 போலி மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் 48 போலி மருத்துவமனைகளில் 'சீல்' வைக்கப்பட்டுள்ளன. ரெய்டு தகவல் தெரிய வந்ததால், 60 மருத்துவமனைகளையும், கிளினிக்குகளை மூடிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
கண்காணிப்பு 14 மருத்துவமனைகள் மீது நீதிமன்றத்தில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 4 மருத்துவமனைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பதிவு மருத்துவமனைகள், மருத்துவ சட்டத்தின்படி தகுதி வாய்ந்த மருத்துவ நடைமுறைகளில் மட்டுமே சிகிச்சை அளிக்கின்றனரா என்பதையும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றப்படுகின்றதா என்பதையும் தாலுகா சுகாதார அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
கிராமங்களில் சட்டவிரோத மருத்துவ செயல்பாடுகள் நடப்பது பற்றி தகவலறிந்தால், தாலுகா சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கோலார் மாவட்ட குடும்ப நல அதிகாரி சந்தன் குமார், இந்திய மருத்துவ சங்கத் தலைவர் நாராயணசாமி, மாவட்ட ஆயுஷ் அதிகாரி உமா, மாவட்ட மருந்து கட்டுப்பாட்டாளர் சியாமளா, கோலார் மாவட்ட அனைத்து தாலுகா சுகாதார அலுவலர்கள் பங்கேற்றனர்.

