/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வகுப்பு தோழியர் 'ராகிங்' கல்லுாரி மாணவி தற்கொலை
/
வகுப்பு தோழியர் 'ராகிங்' கல்லுாரி மாணவி தற்கொலை
ADDED : ஆக 10, 2025 08:34 AM

பாகல்கோட் : உடன் படித்த வகுப்பு தோழியர் ராகிங் செய்ததால், கல்லுாரி மாணவி துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
பாகல்கோட் மாவட்டம், குலேதகுட்டா டவுனை சேர்ந்தவர் அஞ்சலி முண்டாசா, 21. இவர், குலேதகுட்டாவில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலையில் கல்லுாரி முடிந்து வீட்டிற்கு சென்ற அஞ்சலி, தன் அறையில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அஞ்சலி உடலை மீட்டனர். அவரது அறையில் சோதனை நடத்தியபோது ஒரு கடிதம் கிடைத்தது.
அந்த கடிதத்தில், 'என் வகுப்பில் படிக்கும் மாணவர் ஒருவருடன் சகஜமாக பேசி பழகினேன். நாங்கள் இருவரும் காதலிப்பதாக நினைத்து, என்னுடன் படிக்கும் வர்ஷா ஜம்மனகட்டி, பிரதீப் அழகுந்தி ஆகியோர் என்னை கிண்டல் செய்தனர்.
'கல்லுாரியின் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று, என்னை ராகிங் செய்தனர். மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறேன். அவர்கள் இருவரையும் விடக்கூடாது' என எழுதப்பட்டு இருந்தது.
கடிதத்தின் அடிப்படையில், இருவர் மீதும் குலேதகுட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அஞ்சலியின் குடும்பத்தினர், கல்லுாரி முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லுாரி முதல்வர், பேராசிரியர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.