/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வர்த்தக கட்டடங்கள் ஆய்வு உரிமையாளர்கள் கலக்கம்
/
வர்த்தக கட்டடங்கள் ஆய்வு உரிமையாளர்கள் கலக்கம்
ADDED : ஜன 05, 2026 06:22 AM
பெங்களூரு: வருவாயை அதிகரிக்க ஆர்வம் காட்டும், ஜி.பி.ஏ., வர்த்தக கட்டடங்களை ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. கட்டட உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், 6,500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்க, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
சொத்து வரி பாக்கி வைத்துள்ள உரிமையாளர்களுக்கு, நோட்டீஸ் அளிக்க வேண்டும். வரி செலுத்தாவிட்டால் சொத்துகளுக்கு சீல் வைக்கும்படி, பெங்களூரு மத்திய நகராட்சி கமிஷனர் ராஜேந்திர சோழன் உத்தரவிட்டுள்ளார்.
இதற்கிடையே வர்த்தக கட்டடங்களை ஆய்வு நடத்தும்படி, பெங்களுரு மேற்கு நகராட்சி கமிஷனர் ராஜேந்திரா, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். கட்டடங்கள், காலியிடங்களை வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்தும் உரிமையாளர்கள், குடியிருப்பு நோக்கத்துக்கு பயன்படுத்துவதாக பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்து, வரி ஏய்ப்பு செய்கின்றனர்.
கட்டடங்களை வாட கைக்கு விட்டிருப்பது, காலியிடங்களை வாகனங்களை நிறுத்தும் பார்க்கிங் இடமாக பயன்படுத்துவது உட்பட, பல்வேறு வர்த்தக நோக்கத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதனால் மாநகராட்சிக்கு, கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
எனவே வர்த்தக சொத்துகளை ஆய்வு செய்ய, அதிகாரிகள் தயாராகின்றனர். ஆய்வு செய்த பின், நிர்ணயித்த வரியை வசூலிப்பர். வரி ஏய்ப்பு செய்திருந்தால், அபராதத்துடன் வரி வசூலிக்கப்படும். இதனால், வர்த்தக கட்டட உரிமையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

