தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரூ.70 லட்சம் வரி ஏய்ப்பு; சொகுசு கார் 'ஜப்தி'

 ரூ.70 லட்சம் வரி ஏய்ப்பு; சொகுசு கார் 'ஜப்தி'

 ரூ.70 லட்சம் வரி ஏய்ப்பு; சொகுசு கார் 'ஜப்தி'


ADDED : ஜன 05, 2026 06:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 05, 2026 06:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காரின் விலையை குறைவாக காட்டி, 70 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததால், 5.50 கோடி ரூபாய் மதிப்புள்ள, 'பென்ட்லி' சொகுசு காரை, ஆர்.டி.ஓ., அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பெங்களூரு கோரமங்களாவில் வசிக்கும் தொழிலதிபர், இரண்டு ஆண்டுகளுக்கு முன், 5.50 கோடி ரூபாய் மதிப்புள்ள பென்ட்லி காரை வாங்கினார். இதனை பதிவு செய்யும் போது, உண்மையான விலையை கூறாமல், 2.50 கோடி ரூபாய் என்று பொய் சொல்லி பதிவு செய்துார். இதன் மூலம், 70 லட்சம் ரூபாய் வரை வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

அத்துடன் போலியான ஆவணங்கள் அளித்து, காரை பதிவு செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. எனவே ஆர்.டி.ஓ., அதிகாரிகள், நேற்று முன்தினம் கோரமங்களாவில் உள்ள கார் உரிமையாளரின் வீட்டுக்கு சென்றனர். ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது காரின் உண்மையான விலையை மறைத்து, குறைத்து காட்டியது தெரிய வந்தது. அதனால், காரை அதிகாரிகள் ஜப்தி செய்தனர்.

காரை ஜப்தி செய்ய விடாமல், தொழிலதிபர் வாக்குவாதம் செய்தார். 'இரண்டு ஆண்டுக்கு முன்பே, கார் பதிவாகியுள்ளது. நான் விஜய் மல்லையா போன்று, மோசடி செய்து விட்டு ஓடவில்லை. ஆர்.டி.ஓ., அதிகாரிகள் தான் மோசடி செய்கின்றனர்' என குற்றம்சாட்டினார். அவரை பொருட்படுத்தாமல், காரை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us