/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்
/
22 ரவுடிகள் வெளியேற்றம் கமிஷனர் சசிகுமார் தகவல்
ADDED : ஆக 22, 2025 11:17 PM

தார்வாட்: ''சட்டம் - ஒழுங்கை பராமரிக்கும் வகையில், மாவட்டத்தில் இருந்து 22 ரவுடிகள், வெளியேற்றப்பட்டுள்ளனர்,'' என, தார்வாட் - ஹூப்பள்ளி நகர போலீஸ் கமிஷனர் சசிகுமார் தெரிவித்தார்.
தார்வாடில் அவர் நேற்று அளித்த பேட்டி:
விநாயகர் சதுர்த்தி, மிலாடி நபி பண்டிகைகளை முன்னிட்டு, சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் போதைப் பொருள், மட்கா, கிரிக்கெட் சூதாட்டம் உட்பட குற்றங்களில் ஈடுபட்ட ரவுடிகள் அடையாளம் காணப்பட்டனர்.
இவர்களில் இதுவரை 83 ரவுடிகள் மாவட்டத்தை விட்டு வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. க டந்த இரண்டு நாட் களில் 22 பேர் வெளியேற்றப்பட்டனர். இரட்டை நகரங்களான தார்வாட் - ஹூப்பள்ளியில் 1,300 ரவுடிகள் உள்ளனர். இவர்களில் 100 பேர் வெவ்வேறு வழக்குகளில், நீதிமன்ற காவலில் உள்ளனர். வெளியே உள்ள ரவுடிகளை கண்காணித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.