/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எம்.எல்.ஏ.,க்களுடன் மோதல்? சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம்!
/
எம்.எல்.ஏ.,க்களுடன் மோதல்? சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம்!
எம்.எல்.ஏ.,க்களுடன் மோதல்? சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம்!
எம்.எல்.ஏ.,க்களுடன் மோதல்? சதீஷ் ஜார்கிஹோளி விளக்கம்!
ADDED : ஜூலை 02, 2025 08:01 AM

பெலகாவி : ''அரசு அதிகாரிகளின் இடமாற்றம் தொடர்பாக பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டதில் எம்.எல்.ஏ.,க்கள் - அமைச்சர்கள் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை,'' என, மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி:
அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய, எங்களிடம் எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரை கடிதம் தருகின்றனர். அவர்கள் கூறியபடி, ஒப்புதல் தெரிவிக்கிறோம். அப்படி இருக்கும்போது, எம்.எல்.ஏ., - அமைச்சர்கள் இடையே எந்த பிரச்னையும் இல்லை. இந்த செயல்முறை, எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் நடந்து கொண்டே இருக்கும்.
அரசியலில் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது சகஜம். ஆனால், ஒவ்வொரு அதிகாரியும், நான்கு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஒரே ஆண்டில் எந்த அதிகாரியையும் இடமாற்றம் செய்யும் வழக்கம் எங்களிடம் இல்லை. இது தொடர்பாக புதுடில்லியில் நடந்த கூட்டத்திலும் விவாதிக்கவில்லை.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை, முதல்வருடன் சேர்ந்து சந்தித்தோம். அப்போது மாநிலத்துக்கு நியாயமான பங்கு கிடைக்கவில்லை; எதிர்காலத்தில் வரி வருவாயில் அநீதி ஏற்படுவதை தடுக்குமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.