/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அடுத்த முறையும் காங்., அரசு அமையும்: சிவகுமார் நம்பிக்கை
/
அடுத்த முறையும் காங்., அரசு அமையும்: சிவகுமார் நம்பிக்கை
அடுத்த முறையும் காங்., அரசு அமையும்: சிவகுமார் நம்பிக்கை
அடுத்த முறையும் காங்., அரசு அமையும்: சிவகுமார் நம்பிக்கை
ADDED : செப் 20, 2025 04:54 AM
ராம்நகர்: ''வரும் 2028 சட்டசபை தேர்தலிலும் வென்று, காங்கிரசே ஆட்சியில் அமரும். பா.ஜ., - ம.ஜ.த.,வால் ஆட்சிக்கு வர முடியாது,'' என, துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சமீபத்தில் ராம்நகருக்கு வந்த பா.ஜ., தலைவர்கள் உரையாற்றினர். அடுத்த முறை தங்கள் கட்சியே, ஆட்சிக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ம.ஜ.த.,வினர் பெயரை கூற நான் விரும்பவில்லை. மாநிலத்தில் ஆட்சியில் அமருவது குறித்து அக்கட்சியின் நெற்றியில் எழுதவில்லை.
எதிர்க்கட்சியினர் மீண்டும் பிறந்து வந்தாலும், வாக்குறுதி திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது. 2028 சட்டசபை தேர்தலிலும் எங்கள் கட்சியே, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும்; திட்டங்களும் தொடரும்.
மக்களின் உணர்வுகளை வைத்து, பா.ஜ., - ம.ஜ.த.,வினர் அரசியல் செய்கின்றனர். மக்களின் உணர்வுகளை பயன்படுத்தி, நாங்கள் அரசியல் செய்யவில்லை. அவர்களின் நல்வாழ்வுக்காக அரசியல் செய்கிறோம்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு நடக்கும்போது, மக்கள் வீட்டில் இருந்து, தங்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டும். ஆய்வுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்விஷயத்தில், எங்கள் கட்சியின் எம்.எல்.சி., சுதர்ஷன், சில ஆலோசனை கூறியுள்ளார். அதை முதல்வரிடம் தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.