/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய காங்கிரஸ் பிரமுகர் கேரளாவில் கைது
/
பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய காங்கிரஸ் பிரமுகர் கேரளாவில் கைது
பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய காங்கிரஸ் பிரமுகர் கேரளாவில் கைது
பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டிய காங்கிரஸ் பிரமுகர் கேரளாவில் கைது
ADDED : ஜன 27, 2026 04:59 AM

சிக்கபல்லாபூர்: பெண் அதிகாரியை ஆபாசமாக திட்டி, கொலை மிரட்டல் விடுத்த காங்கிரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
சிக்கபல்லாபூர் சித்லகட்டா நகராட்சி கமிஷனராக பணியாற்றுபவர் கே.ஏ.எஸ்., அதிகாரி அம்ருதா கவுடா. இவரது உத்தரவின்படி, சித்லகட்டா நகரில், சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
இதுதொடர்பாக கடந்த, 12 ம் தேதி அம்ருதா கவுடாவிடம் மொபைல் போனில் பேசிய, காங்கி ரஸ் பிரமுகர் ராஜிவ் கவுடா, அம்ருதாவை ஆபாசமாக திட்டியதுடன், உயிருடன் எரிப்பேன் என்றும் கொலை மிரட்டல் விடுத்தார். இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது .
அம்ருதா அளித்த புகாரில், சித்லகட்டா போலீஸ் நிலையத்தில் ராஜிவ் கவுடா மீது வழக்கு பதிவானது. அவர் தலைமறைவானார். இவர் தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இவரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டினர். ஆனாலும், அவர் சிக்கவில்லை.
அமைச்சர் கொடுக்கும் அழுத்தத்தால், ராஜிவ் கவுடாவை கைது செய்ய போலீசார் தயக்கம் காட்டுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. கடுப்பான முதல்வர் சித்தராமையா, சித்லகட்டா போலீசார் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், ராஜிவ், மங்களூரில் இருப்பதாக சித்லகட்டா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. கடந்த மூன்று நாட்களாக அங்கு முகாமிட்டனர். ஆனால், அவர் மங்களூரில் இருந்து தப்பி சென்றதாகவும், அவரது காரை மட்டும் போலீசார் பறிமுதல் செய்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் மங்களூரில் இருந்து கோழிக்கோடு செல்லும் சாலையில் நேற்று மாலை, ராஜிவ் கவுடாவை போலீசார் கைது செய்தனர். அவரை சித்லகட்டாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துகின்றனர். பத்து நாட்களுக்கு பின் ராஜிவ் கவுடா சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

