/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹனி'யை தேடினால் 'டிராப்'பில் சிக்குவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் தத்துவம்
/
'ஹனி'யை தேடினால் 'டிராப்'பில் சிக்குவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் தத்துவம்
'ஹனி'யை தேடினால் 'டிராப்'பில் சிக்குவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் தத்துவம்
'ஹனி'யை தேடினால் 'டிராப்'பில் சிக்குவர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் தத்துவம்
ADDED : மார் 25, 2025 12:52 AM

துமகூரு: ''ஹனியை தேடிச் சென்றால், டிராப்பில் சிக்குவர்,'' என, குப்பி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சீனிவாஸ் தெரிவித்தார்.
துமகூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'ஹனி டிராப்' குறித்து விவாதங்கள் நடந்தபோது, சட்டசபையில் நான் இருக்கவில்லை. நானும் மவுனமாக இருந்தால், என்னையும் 'டிராப்' செய்வர்.
தற்போது ஒருவரின் மீது 'ஹனிடிராப்' நடந்துள்ளது என, தெரிந்தால் அவர் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும். ஆனால் இங்கு யாருமே புகார் அளிக்கவில்லை.
ஹனியை தேடிச் சென்றால், டிராப் செய்யப்படுவர், அப்படி சென்றவர்கள் ஹனிடிராப்பில் சிக்கியுள்ளனர். 40 முதல் 50 பேர் 'ஹனிடிராப்'பில் சிக்கியதாக கூறுகின்றனர்.
இவர்கள் போலீசாரிடம் புகார் அளித்தால் விசாரணை நடக்கும். அதை விட்டு விட்டு மவுனமாக அமர்ந்திருந்தால், இந்த மோசடி வலை மேலும் அதிகரிக்கும். இந்த மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவுக்கு மூளை கெட்டுள்ளது. இதனால் துணை முதல்வர் சிவகுமார் மீது குற்றஞ்சாட்டுகிறார். முனிரத்னா மீது எத்தனை பெண்கள் புகார் அளித்துள்ளனர். எத்தனை நாட்கள் சிறைக்கு சென்று வந்தார் என்பது, அனைவருக்கும் தெரியும்.
சட்டசபையில் ஒரு விஷயத்தை பேசும் முன்பு, தலைவர்களுக்கு அறிவு இருக்க வேண்டும். முதலில் முதல்வர், உள்துறை அமைச்சருடன் கலந்து ஆலோசித்து, புகார் அளித்திருக்க வேண்டும். அதை விட்டு விட்டு நேரடியாக சட்டசபையில் பேசியது சரியல்ல.
இதற்கு முன்பு எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, சட்டசபையில் உறுப்பினர்கள் கூச்சலிட்டால், அவர் ஒரு முறை திரும்பி பார்த்தால், 82 எம்.எல்.ஏ.,க்களும் 'கப்சிப்' என, மவுனமாகிவிடுவர். ஆனால், இப்போது மூக்கணாங்கயிறை கழற்றிவிட்ட காளை போன்ற சூழ்நிலை உள்ளது.
ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமாக ஆடுகின்றனர். கேட்போர் யாரும் இல்லை; தலைமையே இல்லை. காங்கிரசார் செய்கின்றனர் என்பதால், அதேபோன்று எதிர்க்கட்சியினரும் நடந்து கொள்ள கூடாது. சபையில் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதே முக்கியம். எடியூரப்பா போன்ற எதிர்க்கட்சித் தலைவர் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.