தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பயிற்சியாளர்களை கவுரவிக்காத காங்கிரஸ் அரசுக்கு கண்டனம்

பயிற்சியாளர்களை கவுரவிக்காத காங்கிரஸ் அரசுக்கு கண்டனம்

பயிற்சியாளர்களை கவுரவிக்காத காங்கிரஸ் அரசுக்கு கண்டனம்


UPDATED : அக் 09, 2026 12:00 AM

ADDED : அக் 08, 2026 07:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 12:00 AM ADDED : அக் 08, 2026 07:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையரின் பயிற்சியாளர்களை கவுரவிக்காமல், காங்கிரஸ் அரசு புறக்கணித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஜப்பானில் ஐச்சி நகோயா நகரில் நடந்த, 20வது ஆசிய விளையாட்டு போட்டியில், ஆடவர் குத்துசண்டை, ஆடவர் கபடி, மகளிர் கபடி, இந்திய கிரிக்கெட் அணி தங்க பதக்கம் வென்று அசத்தியது.

ஆடவர் குத்துசண்டை அணியின் தலைமை பயிற்சியாளர் அச்சய்யா குட்டப்பா, ஆடவர் கபடி, மகளிர் கபடி அணியின் உதவி பயிற்சியாளர்கள் ரமேஷ், மம்தா, இந்திய கிரிக்கெட் அணி பந்து வீச்சு பயிற்சியாளர் சுனில் ஜோஷி ஆகியோர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆவார்.

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற கர்நாடக வீரர், வீராங்கனையரை கடந்த 6ம் தேதி, முதல்வர் சிவகுமார், துணை முதல்வர் பரமேஸ்வர் கவுரவித்தனர். அவர்களுக்கு ரொக்க பரிசும் வழங்கப்பட்டது. அரசு பணி வழங்குவதாகவும் உறுதி அளிக்கப்பட்டது.

ஆனால், அதே நேரம் பயிற்சியாளர்கள் யாரையும் கவுரவிக்காமல் அரசு புறக்கணித்து இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

குட்டப்பா கூறுகையில், ‘‘பதக்கம் வென்ற வீரர், வீராங்கனையரை கவுரவிப்பது வரவேற்கத்தக்கது.

‘‘ஆனால் அவர்களை தயார்படுத்துவதில் பயிற்சியாளர் பங்களிப்பும் முக்கியமானது. குத்துசண்டையில் இந்திய அணிக்கு தங்கம் கிடைத்தாலும் அந்த அணியின் பயிற்சியாளரான என்னை அரசு கவுரவிக்கவில்லை,’’ என்றார்.

ரமேஷ், மம்தா கூறுகையில், ‘வீரர் – வீராங்கனையருக்கு அரசு ரொக்க பரிசு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. இது அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை. ஆனால் எங்களை கண்டுகொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. பயிற்சியாளர்களுக்கும் அரசு நல்லது செய்யும் என்று நம்பிக்கை உள்ளது’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us