/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களின் வருமான வரம்பை திருத்த பரிசீலனை
/
பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களின் வருமான வரம்பை திருத்த பரிசீலனை
பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களின் வருமான வரம்பை திருத்த பரிசீலனை
பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்களின் வருமான வரம்பை திருத்த பரிசீலனை
ADDED : டிச 19, 2025 05:17 AM
பெலகாவி: சட்டசபையில், பா.ஜ., உறுப்பினர் ராஜேஷ் நாயக், ம.ஜ.த., உறுப்பினர் பாலகிருஷ்ணா எழுப்பிய கேள்விகளுக்கு, உணவு அமைச்சர் முனியப்பா அளித்த பதில்:
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள், பி.பி.எல்., ரேஷன் அட்டை பெறுவதற்கான வருமான வரம்பை ஆண்டிற்கு, 1.20 லட்சம் ரூபாயாக மத்திய அரசு நிர்ணயித்து உள்ளது. ஆனால், தற்போது தொழிலாளர்கள் தினக்கூலியாக, 500 ரூபாய் வாங்குகின்றனர். அதன் அடிப்படையில், கூலி தொழிலாளர்களின் ஆண்டு வருமானம், 1.80 லட்சமாக அதிகரித்து உள்ளது. எனவே, பி.பி.எல்., ரேஷன் அட்டைதாரர்கள் வருமான வரம்பை திருத்த அரசு பரிசீலித்து வருகிறது.
தற்போது பி.பி.எல்., அட்டைகள் மருத்துவ காரணங்களும் பயன்படுத்தப்படுகின்றன. 2023 முதல் 2024 வரை 48,715 குடும்பங்களுக்கு பி.பி.எல்., ரேஷன் அட்டை கிடைத்து உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.