தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நிலுவை தொகையை அரசு முழுமையாக வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் அதிருப்தி

நிலுவை தொகையை அரசு முழுமையாக வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் அதிருப்தி

நிலுவை தொகையை அரசு முழுமையாக வழங்காததால் ஒப்பந்ததாரர்கள் அதிருப்தி


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 07:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: நிலுவை தொகை கேட்டு, ஒப்பந்ததாரர்கள் போராட்டம் நடத்துவதாக எச்சரிக்கை விடுத்த பின், மாநில அரசு, 2,400 கோடி ரூபாய் வழங்கியுள்ளது. எனினும், நிலுவை தொகையில் 10 சதவீதம் கூட வழங்கப்படாததால், அதிருப்தி அடைந்துள்ளனர்.

இது குறித்து, ஒப்பந்ததாரர்கள் சங்கத்தலைவர் மஞ்சுநாத் கூறியதாவது:

பொதுப்பணித்துறை, நகர வளர்ச்சி உட்பட, அரசின் பல்வேறு துறைகளின் பணிகளை நடத்திய ஒப்பந்ததாரர்களுக்கு, 38ஆயிரம் கோடி ரூபாய் பில் பாக்கி உள்ளது. இதை வழங்காவிட்டால், போராட்டம் நடத்துவதாக எச்சரித்தோம். இப்போது, 2,400 கோடி ரூபாய் வழங்கியுள்ளனர்.

தற்போது அரசு வழங்கிய இந்த தொகை, நிலுவை தொகையில் 10 சதவீதமும் இல்லை. இதனால் எங்கள் பிரச்னைக்கு தீர்வு முழுதாக கிடைக்காது.

நீர் பாசனத்துறை மிக அதிகமாக பில் பாக்கி வைத்துள்ளது. பில் பாக்கி கிடைக்காமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஒப்பந்ததாரர்களுக்கு, அரசு வழங்கிய அற்பத்தொகை, எந்த வகையிலும் உதவாது.

நிலுவை தொகையை முழுமையாக வழங்கி, பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

நீர் பாசனத்துறை நிலுவை தொகையை, சீனியாரிட்டி அடிப்படையில் வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இதனால் செல்வாக்கு மிக்க, பெரிய ஒப்பந்ததாரர்களுக்கு முதலில் பணம் கிடைக்கும். சிறிய ஒப்பந்ததாரர்கள் நிலுவை தொகைக்காக, மேலும் பல மாதங்கள் காத்திருக்க வேண்டி வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us