தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’

சிறுமி பலாத்கார வழக்கில் குற்றவாளிக்கு ‘20 ஆண்டு’


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மங்களூரு: சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மங்களூரு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தட்சிண கன்னடா மாவட்டம், புத்துாரு தாலுகாவின், நெல்யாடியில் வசிப்பவர் ரவி என்ற ரவீந்திர ஆச்சார்யா, 32. இவர், கடந்த 2018ல் கடபாவில் வசிக்கும், 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். இதை வெளியே சொன்னால் கொலை செய்வதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, ரவியை கடபா போலீசார் கைது செய்தனர்.

விசாரணையை முடித்து, மங்களூரின் ஏழாவது கூடுதல் மாவட்ட, செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். விசாரணையில் ரவியின் குற்றம் உறுதியானதால், அவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை, 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி சுமங்களா நேற்று தீர்ப்பளித்தார்.

அபராதம் செலுத்த தவறினால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும், உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us