தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மருத்துவர் தேர்வு முறைகேடு காங்., அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’

மருத்துவர் தேர்வு முறைகேடு காங்., அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’

மருத்துவர் தேர்வு முறைகேடு காங்., அரசுக்கு ஐகோர்ட் ‘குட்டு’


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 10:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 10:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கில், எஸ்.ஐ.டி., விசாரணைக் குழுவில் இரண்டு பேரை மாற்ற அனுமதி கொடுத்தும் என்ன செய்கிறீர்கள்’ என்று கேள்வி எழுப்பி, காங்கிரஸ் அரசு தலையில், உயர் நீதிமன்றம் குட்டியுள்ளது.

மருத்துவர் தேர்வு முறைகேடு வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்க கோரி, எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை, நீதிபதி நாகபிரசன்னா விசாரிக்கிறார்.

நேற்று நடந்த விசாரணையின் போது அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ‘‘கால்நடை மருத்துவர் முறைகேடு வழக்கை விசாரிக்கும் எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழுவில் இருந்து, இரண்டு அதிகாரிகளை நீக்கிவிட்டு, புதியவர்கள் பெயர்கள் அடங்கிய சீல் வைக்கப்பட்ட உறையை சமர்ப்பிப்போம்,’’ என்றார்.

இந்த பதிலைக் கேட்டு நீதிபதி நாகபிரசன்னா கோபம் அடைந்தார்.

‘‘எஸ்.ஐ.டி., அமைக்க உத்தரவிட்டு, அந்த குழுவின் தலைவர் பெயரையும் நாங்களே அறிவித்தோம். அதற்கு நீங்கள் ஆட்பேசனை தெரிவித்தீர்கள். குழுவின் தலைவர், இன்னொரு அதிகாரியை மாற்ற நாங்கள் அனுமதி அளித்து 10 நாட்கள் ஆகியும், அரசு என்ன செய்கிறது,’’ என்று கேள்வி எழுப்பினார். மனு மீது, இன்றும் விசாரணை நடக்க உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us