UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 08:44 PM

மைசூரு: மைசூரு தசராவில் பலுான் விற்க வந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில், இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது.
கடந்த 2025ம் ஆண்டு நடந்த மைசூரு தசரா விழாவில், பலுான் விற்பதற்காக கலபுரகியில் இருந்து, ஒரு குடும்பம் , மைசூருக்கு வந்தது. இவர்கள் தசரா பொருட்காட்சி அருகில் கூடாரம் போட்டு தங்கியிருந்தனர்.
தாயின் பக்கத்தில் படுத்திருந்த 9 வயது மகளை நள்ளிரவில் காணவில்லை. பெற்றோரும், மற்ற வியாபாரிகளும் சிறுமியை தேடத் துவங்கினர்.
சிறுமியை எங்கும் காணாததால், நஜர்பாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், பொருட்காட்சி மையத்திற்கு சற்று தொலைவில், நிர்வாண நிலையில் சிறுமியின் உடலை கண்டெடுத்தனர்.
சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, கார்த்திக், 32, என்பவர், சிறுமியை பாலியல் பலாத்கார் செய்து, கொன்றது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, மைசூரின் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். கார்த்திக், குற்றவாளி என, நேற்று அறிவித்த நீதிபதி அனில் வகாடே, தண்டனையை இன்று வெளியிடுவதாக அறிவித்துள்ளார்.
