sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 24, 2026 ,தை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஸ்பெஷல்

/

அறுசுவை

/

சமையல் டிப்ஸ் : பட்டாணி தோலை உரிக்க 'மிக ஈசியான வழி'

/

சமையல் டிப்ஸ் : பட்டாணி தோலை உரிக்க 'மிக ஈசியான வழி'

சமையல் டிப்ஸ் : பட்டாணி தோலை உரிக்க 'மிக ஈசியான வழி'

சமையல் டிப்ஸ் : பட்டாணி தோலை உரிக்க 'மிக ஈசியான வழி'


ADDED : ஜன 17, 2026 07:10 AM

Google News

ADDED : ஜன 17, 2026 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

 பொதுவாக சேமியா உப்புமா செய்தால், ஒன்றோடு ஒட்டிக்கொண்டு பிசுபிசுப்பாக இருக்கும். இது, வீட்டினருக்கு பிடிப்பதில்லை. இதனால், உப்புமா பெயரை கேட்டாலே ஓட்டம் பிடிப்பர். இதைத் தவிர்க்க எளிதான வழி உள்ளது.

முதலில் வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடான பிறகு, சேமியாவை போட்டு நன்கு வறுத்த பின், சரியான அளவில் நீர் சேர்த்தால் உப்புமா உதிரி, உதிரியாக வரும்.

 இல்லத்தரசிகளுக்கு, பட்டாணி தோலை உரிப்பது, பெரிய தலைவலி. ஒரு கிலோ பட்டாணியை உரிக்க அரை மணி நேரமாகும். கை விரல்கள் வலிக்கும். ஒரு பெரிய பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை ஊற்றி, லேசாக சூடாக்குங்கள். தண்ணீர் கொதிக்க துவங்குவதற்கு முன், பட்டாணியை அதில் போட்டு, உடனடியாக அடுப்பை அணையுங்கள்.

இரண்டு நிமிடம் சுடுநீரில் பட்டாணியை வைத்திருங்கள். இப்படி செய்வதால் பட்டாணி வெந்துவிடாது. தோல் மிருதுவாகும். இதில், குளிர்ந்த நீரை ஊற்றி, இரண்டு நிமிடங்கள் வைத்திருங்கள். அதன்பின் பட்டாணி தோல் தானாகவே பிரிந்து விடும்.

 சிலர் சமையல் செய்யும் போது, உப்பை டப்பாவில் இருந்து எடுத்து அப்படியே போடுவர். அப்படி செய்தால், உணவில் உப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. உப்பை சிறு கப்பில் வைத்து கொண்டு விரல்களில் எடுத்து போட்டால், சரியான அளவு தெரியும்.

 குழம்பு அல்லது ரசத்தில் உப்பு அதிகமாகி விட்டால், கவலை வேண்டாம். சிறிதளவு கோதுமை மாவை உருண்டையாக்கி போட்டால், குழம்பில் உள்ள உப்பை ஈர்த்து கொள்ளும்.

 சமையலை துவக்குவதற்கு முன், தேவையான காய்கறிகளை நறுக்கி வைக்க வேண்டும். மசாலா பொருட்கள், பாத்திரங்களை அருகில் வைத்து கொள்ளலாம். இதனால், சமையல் அறையில் அங்கும், இங்கும் நடந்து அல்லாடுவதை தவிர்க்கலாம். சமையலும் விரைவில் முடியும்.

 சில நேரங்களில் சமைக்கும் போது, உணவு தீய்ந்து குக்கர் கருப்பாக மாறிவிடும். இந்த கறை அப்படியே தங்கிவிடும். நாளடைவில் குக்கரின் உட்புறம் கருமையாக காணப்படும். எவ்வளவு தேய்த்தாலும் போகவில்லை என்ற வருத்தமா. அதற்கு அவசியமே இல்லை. வெள்ளை நிற டூத் பேஸ்டை, இரும்பு ஸ்க்ரப்பரில் தடவி, குக்கரில் கறை உள்ள இடத்தில் தேயுங்கள்; கறை காணாமல் போகும்.

 உணவு சமைக்க அதிகமான எண்ணெய் பயன்படுத்தினால், உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. 'நான் ஸ்டிக் பேன்' அல்லது அடி கனமான வாணலியை பயன்படுத்துங்கள். அரை ஸ்பூன் எண்ணெயில் சமைக்கலாம். இது காய்கறிகள் அடியில் ஒட்டி கொள்வதை தவிர்க்கும். எண்ணெயும் அதிகம் தேவைப்படாது.

 காலை நேரம் சிற்றுண்டி சாப்பிட மனம் இல்லையா. அப்படி என்றால், சிறிதளவு உலர்ந்த திராட்சை மற்றும் வால்நட்ஸ் சாப்பிடுங்கள். இது ஜீரண சக்தியை தருவதுடன், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 கொத்துமல்லி உட்பட, கீரைகளை பிரிஜ்ஜில் வைத்தால், விரைவில் அழுகி போகின்றன. கீரை, கொத்துமல்லியை வாங்கி வந்தவுடன் அழுகிய இலைகள் இல்லாமல் ஆய்ந்து கொள்ளுங்கள். தண்ணீரில் இரண்டு, மூன்று முறை நன்றாக கழுவி, சல்லடையில் போடுங்கள். நீர் வடிந்த பின் காட்டன் துணி அல்லது பேப்பர் மீது உதிரி, உதிரியாக பரப்பி காய வையுங்கள். ஈரம் இல்லாமல் காய்ந்தபின், டப்பாவில் டிஷ்யூ பேப்பர் வைத்து அதன் மீது கீரையை வைத்து, அதன் மீது மற்றொரு டிஷ்யூ பேப்பர் போட்டு மூடி, காற்று புகாமல் வைத்திருந்தால், ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.






      Dinamalar
      Follow us