l தோசை மாவில் சாதம் வடித்த நீரை சேர்த்தால், தோசை மிருதுவாக வரும்.
l தோசை மாவு புளித்து விட்டால், அதில் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை தேங்காய் துண்டுகள் சேர்த்து பணியாரம் செய்யலாம்.
l இட்லி மிளகாய் பொடியுடன் வெங்காயத்தை சேர்த்து அரைத்தால், எளிமையான முறையில் வெங்காய சட்னி தயார்.
l காரக்குழம்பு செய்யும் போது அதிகம் தண்ணீர் சேர்த்து விட்டால், ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்பை வறுத்தரைத்து சேர்த்தால் போதும்.
l ரவை உப்புமா செய்யும்போது கடலைப்பருப்பு சேர்த்து தாளித்தால் சாப்பிடுவதற்கு ருசியாக இருக்கும்.
l அரிசி கழுவிய நீரில் உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு போன்றவற்றை போட்டு கொதிக்க வைத்தால் விரைவில் வெந்துவிடும்.
l தக்காளி தொக்கு செய்யும் போது இறுதியாக கொத்தமல்லி இலைகள் துாவினால் வாசனையாக இருக்கும்.
l பூண்டு, பச்சை மிளகாய், கொத்தமல்லியை முன்கூட்டியே நறுக்கி டப்பாக்களில் சேமித்து வைத்தால் சமையல் எளிதாகும்.
l பாகற்காயின் கசப்பை நீக்க, உப்பு மற்றும் தயிர் சேர்த்து ஊறவைத்து சமைக்கலாம்.

