ADDED : மே 02, 2026 03:37 AM

- நமது நிருபர் -
கோடையில் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதிலிருந்து தப்பிக்க பல்வேறு பழ ரசங்களை அருந்துகின்றனர். பழரசங்கள் விற்கும் கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இது மாம்பழ சீசன். கடைக்கு செல்லாமல் வீட்டிலேயே சுவையான மாம்பழ லஸ்ஸி தயாரித்து அருந்தலாம்.
தேவையான பொருட்கள்: l மாம்பழ துண்டுகள் - 2 கப்
l சர்க்கரை - நான்கு ஸ்பூன்
l கொதித்து ஆறிய பால் - 1 கப்
l ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்
l உப்பு - ஒரு சிட்டிகை
l முந்திரிப்பருப்பு - ஐந்தாறு
l ஐஸ் கியூப் - சிறிதளவு
l கெட்டியான தயிர் - 2 கப்
l டிரை ப்ரூட்ஸ் - ஒரு கைப்பிடி
செய்முறை: முதலில் மாம்பழத்தை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். மாம்பழ துண்டுகள், சர்க்கரை, கொதித்து ஆற வைத்த பால் சேர்த்து, மிக்சியில் மிருதுவாக அரைக்கவும்.
இதில் தயிர், பொடித்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய் பொடி, உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
லஸ்ஸியை கிண்ணத்தில் ஊற்றி, அதில் ஐஸ் கியூப்கள் போட்டால் சுவையான லஸ்ஸி தயார். இதில் சில மாம்பழ துண்டுகள், டிரை ப்ரூட்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறலாம். வெயிலுக்கு இதமாக இருக்கும். குழந்தைகளும், பெரியவர்களும் விரும்பி அருந்துவர். நன்கு பழுத்த மாம்பழத்தை பயன்படுத்தினால், சுவை அதிகமாக இருக்கும்.
இனிப்பு அதிகம் தேவை என்றால், கூடுதல் சர்க்கரையை சேர்த்து கொள்ளலாம்.
