/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
லால்பாக் நடைபாதைகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
/
லால்பாக் நடைபாதைகளில் மாநகராட்சி கமிஷனர் ஆய்வு
ADDED : மே 09, 2025 11:39 PM

பெங்களூரு: லால்பாக் பகுதியில் உள்ள நடைபாதைகளில் பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் நேற்று ஆய்வு செய்தார்.
பெங்களூரு லால்பாக் பகுதிகளில் உள்ள நடைபாதைகளை சாலையோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளதாக பெங்களூரு மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.
இதை கருத்தில் கொண்ட மாநகராட்சியின் புதிய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ், நேற்று காலை லால்பாக் பகுதியை சுற்றியுள்ள நடைபாதைகளில் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் தென் மண்டல கமிஷனர் திக்விஜய் போட்கே, திட்டமிடல் துறை சிறப்பு கமிஷனர் அவினாஷ் மேனன் ராஜேந்திரன், மண்டல இணை ஆணையர் மது, தலைமை பொறியாளர் ராஜேஷ், நிர்வாக பொறியாளர் மற்றும் பல அதிகாரிகள், ஊழியர்களும் சென்றனர்.
இந்த ஆய்வு, லால்பாக் கிழக்கு வாயிலில் இருந்து துவங்கி சித்தப்பாரா வட்டம், அசோக் பில்லர் வட்டம் வழியாக சென்று ஜெயநகர் இந்திரா கேன்டீனில் முடிவடைந்தது. 1.9 கி.மீ., துாரம் நடந்து சென்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள், 3 மின்கம்பங்கள் ஆகியவற்றை அகற்றவும், சேதமாக இருக்கும் பகுதிகளை சீர்செய்யவும், மரக்கன்றுகளை நட்டு வளர்க்கவும், நீண்ட நாளாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அகற்றவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தலைமை கமிஷனர் உத்தரவிட்டார்.