/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளநோட்டுகள் புழக்கம்: நால்வர் அதிரடி கைது
/
கள்ளநோட்டுகள் புழக்கம்: நால்வர் அதிரடி கைது
ADDED : ஜூலை 26, 2025 04:54 AM
தாவணகெரே: கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர். 4 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
தாவணகெரே மாவட்டம், சென்னகிரி தாலுகாவின், சிரடோனி கிராமத்தில் கள்ள நோட்டுகள் புழக்கத்தில் உள்ளதாக, போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இதனால், கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விடுவோரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சந்தே பென்னுார் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் லிங்கனகவுடா நெகளூர் தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டிருந்தது.
இக்குழுவினர் பல கோணங்களில் விசாரணை நடத்தினர். சிரடோனி கிராமத்தின், தொட்டகட்டா சாலையில் சாந்தி வனம் அருகில், சந்தோஷ் குமார், 32, வீரேஷ், 37, ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இரண்டு லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் கொடுத்த தகவலின்படி, குபேரப்பா, 60, ஹனுமந்தப்பா, 75, ஆகிய இருவரை நேற்று போலீசார் கைது செய்தனர். இவர்களிடமும் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நால்வரிடமும் தீவிர விசாரணை நடக்கிறது. இவர்கள் எந்தெந்த இடங்களில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளனர் என்கின்ற தகவல்களை கேட்டறிகின்றனர்.