ADDED : செப் 04, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
ராம்நகர்: கள்ள ரூபாய் நோட்டு தயாரித்த கும்பலை சேர்ந்த, மேலும், மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் ராம்நகர் டவுனில் கட்டுமானத்தில் உள்ள வீட்டில் 200, 500 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை தயாரித்து புழக்கத்தில் விட்டதாக, வீட்டின் உரிமையாளர் சந்தோஷ் உட்பட, ஏழு பேரை, கடந்த மாதம் 31ம் தேதி ஐசூர் போலீசார் கைது செய்தனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், சாம்ராஜ்நகரை சேர்ந்த அஸ்ரப் அலி, 35, என்பவர், கள்ள நோட்டு தயாரிக்கும் கும்பலின் தலைவன் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த அவரை போலீசார் தேடிவந்த நிலையில், சாம்ராஜ்நகரின் கொள்ளேகாலில் கைது செய்யப்பட்டார்.
இவரது கூட்டாளிகள் கனகபுராவின் மஞ்சு, 37, நாகராஜ், 48, ஆகியோரும் போலீசில் சிக்கியுள்ளனர்.
