sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

தசராவுக்கு சாரட் வண்டியில் ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற தம்பதியர்

/

தசராவுக்கு சாரட் வண்டியில் ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற தம்பதியர்

தசராவுக்கு சாரட் வண்டியில் ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற தம்பதியர்

தசராவுக்கு சாரட் வண்டியில் ஊர்வலம் ஆர்வத்துடன் பங்கேற்ற தம்பதியர்


ADDED : செப் 27, 2025 11:11 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு: மைசூரில் தசரா களை கட்டுகிறது. சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர். தசராவையொட்டி, கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், உணவு மேளா, மலர் கண்காட்சி என, பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

நேற்று, குதிரை வண்டியில் பாரம்பரிய உடைகளில் தம்பதியரின் ஊர்வலம் நடந்தது.

சுற்றுலாத்துறை சார்பில் நேற்று நடந்த ஊர்வலத்தில் அவரவர் மாவட்டத்தின், சம்பிரதாய உடையணிந்து 50க்கும் மேற்பட்ட தம்பதியர் பங்கேற்றனர். அலங்கரிக்கப்பட்ட குதிரை வண்டிகளில் மணமக்களை போன்று அலங்கரித்த தம்பதியர் வலம் வந்தனர்.

இதுகுறித்து, சுற்றுலாத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

தசராவையொட்டி, குதிரை வண்டி ஊர்வலம் ஏற்பாடு செய்தோம். இதில் தம்பதியரை அமர்த்தி, மன்னராட்சி வரலாற்று, பாரம்பரிய கட்டடங்கள் குறித்து தகவல் தெரிவிக்கப்படும்.

வரலாற்று சிறப்புகளை நினைவூட்டுவது, பாரம்பரிய உடைகளை அணிவதை ஊக்கப்படுத்துவது, நலிவடைந்துள்ள குதிரை சாரட் வண்டிகளை தக்கவைத்துக்கொள்வதே, இந்நிகழ்ச்சியின் நோக்கம்.

பாரம்பரிய உடையணிந்து, சாரட் வண்டிகள் ஊர்வலத்தில் பங்கேற்க, மைசூரு மாவட்டத்தின், பல இடங்களில் இருந்தும் தம்பதியர் ஆர்வத்துடன் வந்தனர்.

நம் மாநிலத்தின் கலாசாரத்தை பிரதிபலித்தனர். மைசூரு தலைப்பாகை, வேட்டி, சால்வையுடன் கணவரும், பட்டுச்சேலை அணிந்து, மல்லிகைப்பூ வைத்து மனைவி வந்தனர்.

மைசூரு நகரின், முக்கிய சாலைகளான, பெரிய கடிகார சாலை, அம்பாவிலாஸ் அரண்மனை, கிருஷ்ண ராஜ உடையார் சதுக்கம், லான்ஸ்டவுன் கட்டடம், ஜெகன்மோகன் அரண்மனை, மைசூரு மாநகராட்சி அலுவலகம் வழியாக வந்த சாரட் வண்டிகள், மஹாராஜா சமஸ்கிருத பாடசாலை, தாலுகா அலுவலகம், கன் ஹவுஸ் சதுக்கம், ஹார்டின்ச் சதுக்கம் வழியாக சென்று, டவுன் ஹாலை அடைந்தன.

இந்த பயணம் மன்னராட்சி காலத்தை கண் முன்னே கொண்டு வரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us