/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய தம்பதி ஓட்டம்
/
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய தம்பதி ஓட்டம்
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய தம்பதி ஓட்டம்
சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் சுருட்டிய தம்பதி ஓட்டம்
ADDED : ஜூன் 08, 2025 10:39 PM
புட்டேனஹள்ளி: பெங்களூரின் ஜரகனஹள்ளியில் வசிப்பவர் சித்தப்பாஜ்ஜி, 48. இவரது மனைவி சுதா, 43. தம்பதி சீட்டு தொழில் நடத்தினர்.
அதிக லாபம் கிடைக்கும் என, ஆசை காட்டி அக்கம், பக்கத்தினர், அறிமுகம் உள்ளவர்களை சீட்டில் சேர்த்துக் கொண்டனர்.
தம்பதி ஐந்து லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரையிலான சீட்டு நடத்தினர். 5 லட்சம் சீட்டுக்கு மாதந்தோறும் 12,500 ரூபாயும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சீட்டுக்கு 25,000 ரூபாயும் வசூலித்தனர். 200 பேருக்கு மேற்பட்டோர், தம்பதியிடம் சீட்டுக் கட்டினர்.
இதற்கிடையே சீட்டு எடுத்தவர்களுக்கு சரியாக பணம் தரவில்லை. கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக்கொண்டு, இரவோடு இரவாக தம்பதி வீட்டை விட்டு தப்பியோடினர்.
மொபைல் போன் லொகேஷனை வைத்து, போலீசார் நெருங்கக்கூடும் என்ற பீதியால் மொபைல் போன்களை, வீட்டிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கும் தம்பதி எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை.
சீட்டு எடுத்தவர்கள், நேற்று முன் தினம் பணம் கேட்க சித்தப்பாஜி வீட்டுக்கு வந்தபோது, தம்பதி கம்பி நீட்டியது தெரிய வந்தது.
உடனடியாக புட்டேனஹள்ளி போலீசில் புகார் அளித்தனர்.