/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மீண்டும் மறுத்தது நீதிமன்றம்
/
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மீண்டும் மறுத்தது நீதிமன்றம்
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மீண்டும் மறுத்தது நீதிமன்றம்
பிரஜ்வல் ரேவண்ணா ஜாமின் மீண்டும் மறுத்தது நீதிமன்றம்
ADDED : ஜூலை 26, 2025 04:56 AM

பெங்களூரு: வீட்டு பணிப்பெண் பலாத்கார வழக்கில், இரண்டாவது முறையாக தாக்கல் செய்திருந்த ஜாமின் மனுவை, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வீட்டு பணிப்பெண் பலாத்கார வழக்கில், ஓராண்டுக்கும் மேலாக, முன்னாள் ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதன் முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், மாநில உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தன.
இரண்டாவது முறையாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், விசாரணை நீதிமன்றமான, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில் முறையிடுமாறு உத்தரவிட்டது.
இதையடுத்து, இரண்டாவது முறையாக மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றத்தில், ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம், ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால், ரேவண்ணா குடும்பத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். பிரஜ்வலும் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

