/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ராபர்ட்சன்பேட்டை காந்தி சிலையில் விரிசல்
/
ராபர்ட்சன்பேட்டை காந்தி சிலையில் விரிசல்
ADDED : டிச 28, 2025 05:04 AM

தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டையில் உள்ள காந்தி சிலையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது, எப்போது உடைந்து விழுமோ என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
ராபர்ட்சன்பேட்டையில், சுதந்திர போராட்ட தியாகிகளால், 1962ல் காந்தி சிலை நிறுவப்பட்டது. இது, தற்போது பழுதடைந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன் காந்தி சிலையின் கோபுரத்தை அகற்றி, புதிதாக சிமென்ட் சிலையை நகராட்சி நிர்வாகம் நிறுவியது.
தற்போதுள்ள காந்தி சிலையின் வயிற்று பகுதியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
வலுவிழந்துள்ள இச்சிலை எப்போது வேண்டுமானாலும் விழும் ஆபத்தில் உள்ளது.
ஏற்கனவே ராபர்ட்சன்பேட்டை நகராட்சி வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலையிலும் விரிசல் காணப்படுகிறது. இதை அகற்றி புதிய உலோக சிலை நிறுவ. 5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கினர். இரண்டு ஆண்டுகளாகியும் யாரும் கண்டு கொள்ள வில்லை. சிலைகளுக்கு மறுவாழ்வு எப்போது கிடைக்குமோ.

