ADDED : ஜூலை 11, 2026 11:29 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவரான வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான, உயர்மட்ட குழுவினர், மாநில முதல்வர் சிவகுமாரை சந்தித்தனர்.
கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் தலைவர் வெங்கடேஷ் பிரசாத், பொருளாளர் மதுகர் உட்பட, உயர்மட்ட குழுவினர், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவுக்கு, நேற்று மாலை வந்தனர். முதல்வர் சிவகுமாரை சந்தித்து, ஆலோசனை நடத்தினர்.
மாநிலத்தில் விளையாட்டுகளுக்கு, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கிரிக்கெட்டை ஊக்கப்படுத்த திட்டங்கள் வகுக்க வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை முதல்வரிடம் தெ ரிவித்தனர்.
முதல்வரும், ''விளையாட்டு துறைக்கு, அரசு எப்போதும் ஊக்கமளிக்கும். கிரிக்கெட் அசோசியேஷன் முன்னேற்றத்துக்கு, தேவையான ஒத்துழைப்பை அளிக்கும்,'' என உறுதியளித்தார்.
