ADDED : ஆக 12, 2026 12:03 AM
அ நிறம் | அளவு
பள்ளி பஸ் மோதி சிறுமி பலி
தார்வாட் அள்னாவராவின் ஹுல்லிகேரி கிராமத்தை சேர்ந்த லுக்மான் போகூரா, 2, நேற்று காலை வீட்டின் அருகில், சாலை ஓரத்தில் நின்றிருந்தார். அப்போது மாணவர்களை அழைத்து செல்ல அவ்வழியாக வந்த பள்ளி பஸ், சிறுமி மீது மோதியதில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தங்க நகைகள் 'அபேஸ்'
தாவணகெரே ஜகளூரின் தேவிகெரே கிராமத்தில் வசிக்கும் கவிதா, ஐந்து நாட்களுக்கு முன் வீட்டை பூட்டிவிட்டு, உடல் நலமில்லாத மகனை தாவணகெரே மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தார். வீட்டை நோட்டம் விட்ட மர்மகும்பல் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 410 கிராம் தங்கநகை, 600 கிராம் வெள்ளி, 4 லட்சம் ரூபாய் ரொக்கம் உட்பட, 52 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். நேற்று காலையில் கவிதா வீட்டுக்கு வந்த பார்த்த போது, திருட்டு நடந்திருப்பது தெரிய வந்தது.
