/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
யானைகள் அட்டகாசத்தால் பயிர்கள் நாசம்
/
யானைகள் அட்டகாசத்தால் பயிர்கள் நாசம்
ADDED : செப் 20, 2025 04:51 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டையின் கத்ரிகுப்பா கிராமத்தின் விளை நிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.நேற்று முன்தினம் இரவு, கத்ரிகுப்பா கிராம விளை நிலத்தில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்தன.
சந்தோஷ் ராவ், ஈஸ்வர்ராவ் ஆகியோரின் நிலங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிரை யானைகள் நாசப்படுத்தி உள்ளன. இதனால் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பயிர் நாசமானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பெரிதும் வருத்தம் அடைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி பலரின் விளை நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த கேழ்வரகு, வாழை, காய்கறிகள் எல்லாம் நாசம் ஆகி உள்ளது.
பாதிக்கப்பட்ட விவசாயிகள் பங்கார்பேட்டை தாசில்தார், விவசாயத் துறை, வனத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர்.
இதுதொடர்பாக கோலார் மண்டல துணை அதிகாரி ஜி.நாகேஷ் கூறுகையில், ''தமிழக வனப் பகுதியில் இருந்து தான், நான்கு நாட்களுக்கு முன்பு யானைகள் பங்கார்பேட்டை கத்ரிகுப்பா கிராம வயல்களில் நடமாடுவதாக தகவல் கிடைத்தது. அதன் பின், யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி விட்டோம்,'' என்றார்.
- பங்கார்பேட்டை தாலுகா விவசாயிகள் சங்கத் தலைவர் அப்போஜி ராவ் கூறுகையில், ''விவசாயிகள் வங்கிகளில் கடன் வாங்கி, பயிரிட்டுள்ளனர். ஆனால் வனவிலங்குகளால் பயிர்கள் நாசமாவதால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பயிர்களுக்கு இழப்பீடு வழங்க அரசு கருணைக் காட்ட வேண்டும். வனவிலங்குகளை விளைநிலங்களில் நுழையாதபடி தடுக்க பாதுகாப்பு படை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.