தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஸ்பெஷல்/அறுசுவை/ நொறுக்குகள்

 நொறுக்குகள்

 நொறுக்குகள்


ADDED : ஜூன் 19, 2026 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 19, 2026 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

-நமது நிருபர் -: *முறுக்கு மாவு பிசையும் போது நன்றாக பழுத்த ஒரு வாழைப்பழத்தை சேர்த்து பிசைந்தால், முறுக்கு சுவையாக இருக்கும்

*கத்திரிக்காய் அல்லது வாழைக்காயை நறுக்கியவுடன் சிறிது உப்பு கலந்த தண்ணீரில் போட்டு வைத்தால், அவை விரைவாக கருமையாகாமல் இருக்கும்

* கடலை எண்ணெய் பயன்படுத்தி பலகாரம் செய்தால், பலகாரங்கள் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்

* பூரி மாவு பிசையும் போது சிறிதளவு வேக வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து பிசைந்தால், பூரி மென்மையாக இருக்கும்

* வாழைக்காயை சமைக்கும் போது மிளகு, சீரகம் அதிகமாக சேர்த்து கொண்டால் வாயுத்தொல்லை ஏற்படாது

* பழுத்த தக்காளிகள் மீது சிறிது உப்பு துாவினால், இரண்டு நாட்கள் வரை கெடாமல் இருக்கும்

* வெந்தய தோசையின் மீது மிளகு, சீரக பொடி துாவி சாப்பிட்டால் தோசையின் சுவை அற்புதமாக இருக்கும்

*கருணை கிழங்கை வேக வைக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்த்தால் கிழங்கு சீக்கிரம் வெந்து விடும்

* மோர் குழம்பு வைக்கும்போது நெல்லிகாய்களை அரைத்து சேர்த்தால் குழம்பின் சுவை கூடும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us