தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/சுற்றுலா தலங்களில் சுடச்சுட உணவு வழங்கும் திட்டம்

சுற்றுலா தலங்களில் சுடச்சுட உணவு வழங்கும் திட்டம்

சுற்றுலா தலங்களில் சுடச்சுட உணவு வழங்கும் திட்டம்


UPDATED : அக் 04, 2026 02:50 AM

ADDED : அக் 03, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 02:50 AM ADDED : அக் 03, 2026 11:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள பிரபல சுற்றுலா தலங்களில், 'மயூரா ருச்சி ஆன் வீல்ஸ்' திட்டம் எனும் நடமாடும் வாகனங்களில் அவ்வப்போது உணவு தயாரித்து சுடச்சுட சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்யப்படும்,'' என, சுற்றுலா அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

கர்நாடகாவில் சுற்றுலா மேம்பாடு குறித்து, பெங்களூரில் நேற்று அத்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

அமைச்சர் ஜார்ஜ் பேசியதாவது:

கர்நாடகாவின் புகழ்பெற்ற சுற்றுலா தலங்க ளுக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு சுத்தமான, தரமான, சுவையான உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், 'மயூரா ருச்சி ஆன் வீல்ஸ்' திட் டம் துவங்கப்பட உள்ளது.

அதாவது, சுற்றுலாத்துறைக்கு சொந்தமான மயூரா ஹோட்டல்களில் வழங்கப்படும் சுவையான உணவுகள், நடமாடும் வாகனங்களில் அவ்வப்போது தயாரித்து சுடச்சுட சுற்றுலா பயணியருக்கு விற்பனை செய்யப்படும். இந்த வாகனம் சுற்றுலா பயணியர் அதிகமுள்ள இடங்களுக்கு சென்று, உணவை விற்பனை செய்யும்.

முதல் கட்டமாக, ஹம்பி, மடிகேரி, ஜோக் நீர்வீழ்ச்சி, மைசூரு, நந்திமலை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தலங்களில் சேவை துவங்கப்பட உள்ளது.

இது, மயூரா ஹோட்டல்கள் குறித்து சுற்றுலா பயணியருக்கு தெரியப்படுத்தும் முயற்சியாகும். பாரம்பரிய உணவுகள் வழங்கப்படும். இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஒரே குடை


சுற்றுலாவின் போது உணவுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுவது வழக்கம். மயூரா ருச்சி ஆன் வீல்ஸ் திட்டம் மூலம், மயூரா ஹோட்டல் வழங்கப்படும் உணவை, சுற்றுலா பயணியர் ருசிக்க முடியும். இதன் மூலம் தரமான சேவை, சுற்றுலா பயணியரின் வசதி ஆகியவற்றை ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும்.
- ராம் பிரசாத் மனோகர், செயலர், மாநில சுற்றுலாத்துறை



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us