தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/மாணவர் சேர்க்கை குறைவு எதிரொலி பள்ளி கட்டடங்களை விற்க ஆர்வம்

மாணவர் சேர்க்கை குறைவு எதிரொலி பள்ளி கட்டடங்களை விற்க ஆர்வம்

மாணவர் சேர்க்கை குறைவு எதிரொலி பள்ளி கட்டடங்களை விற்க ஆர்வம்


UPDATED : அக் 04, 2026 12:00 AM

ADDED : அக் 03, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 04, 2026 12:00 AM ADDED : அக் 03, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாணவர் சேர்க்கை குறைந்ததால், பெங்களூரின் சிறிய தனியார் பள்ளிகள், மூடும் நிலைக்கு வந்துள்ளன. தங்கள் வசமுள்ள கட்டடங்களை விற்க உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கட்டடங்கள், விற்பனைக்கு வந்துள்ளன.

பெங்களூரில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கின்றன. இதனால் மாணவர்கள் ஈர்க்கப்படுகின்றனர். இவைகளுடன் போட்டி போட்டு, சோர்வடைந்துள்ள பல தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள், கட்டடத்தை விற்க முடிவு செய்துள்ளனர்.

சிலர் பள்ளி கட்டடத்தை வாடகைக்கு விடவும் ஆலோசிக்கின்றனர். பெங்களூரு முழுவதும், 200க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி கட்டடங்கள், விற்பனைக்கு வந்துள்ளன.

இது குறித்து, தனியார் பள்ளி உரிமையாளர்கள் கூறியதாவது:

மாநில, மத்திய பாடத்திட்டங்கள் கொண்ட பெரும்பாலான தனியார் பள்ளிகளில், கொரோனாவுக்கு பின் மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. சிறிய பட்ஜெட்டில் செயல்படும் தனியார் பள்ளிகளால், கார்ப்பரேட் பள்ளிகளுடன் போட்டியிட முடியவில்லை.

மாணவர்களின் பெற்றோரும், சிறு, சிறு தனியார் பள்ளிகளுக்கு பதிலாக, பிரபலமான பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர்.

பிரபலமான கார்ப்பரேட் பள்ளிகள், தங்கள் பள்ளிகளின் அடிப்படை வசதிகளுக்கு, கோடிக்கணக்கான ரூபாய் செலவிடுகின்றன. பள்ளியில் இருந்து, 50 கி.மீ., எல்லை வரை, பள்ளி சார்பில் பஸ் வசதி செய்கின்றன. ஆனால் சிறு சிறு பள்ளிகள், 15 கி.மீ., தொலைவு வரை, பஸ் வசதி செய்கின்றன.

பெரும்பாலான பள்ளிகள், குறைந்த பட்ஜெட்டில் செயல்படுகின்றன. இத்தகயை பள்ளிகளால் அரசின் நிபந்தனைகளை கடைபிடிக்க முடிவது இல்லை.

கொரோனாவுக்கு பின், பல தனியார் பள்ளிகளில் 100 முதல் 200 மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. கிடைக்கும் வருவாயில் பள்ளிகளை நிர்வகிப்பது கஷ்டமாக உள்ளது. எனவே பள்ளி உரிமையாளர்கள், கட்டடத்தை விற்க ஆர்வம் காட்டுகின்றனர்.

ஏற்கனவே சில பள்ளி கட்டடங்கள், மாத வாடகைக்கும், ஒப்பந்ததுக்கும் அளித்துள்ளன. மாதம் குறைந்தபட்சம் ஐந்து லட்சம் ரூபாய் முதல், 40 லட்சம் ரூபாய் வரை, வருவாய் பெறுகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us