/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்திரா உணவகங்களில் உணவு மெனு மாறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
/
இந்திரா உணவகங்களில் உணவு மெனு மாறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
இந்திரா உணவகங்களில் உணவு மெனு மாறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
இந்திரா உணவகங்களில் உணவு மெனு மாறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்
ADDED : மே 02, 2025 11:27 PM

பெங்களூரு: இந்திரா உணவகங்களில் உணவு மெனுக்கள் மாறும் என, வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இதுவரை மெனுக்கள் மாறாததால் ஏமாற்றம் அடைகின்றனர்.
கர்நாடகாவில் 2013ல் முதன் முறையாக முதல்வர் பதவிக்கு வந்த போது, சித்தராமையா இந்திரா உணவகங்கள் திட்டத்தை செயல்படுத்தினார். முதலில் பெங்களூரில் உணவகங்கள் திறக்கப்பட்டன. அதன்பின் மற்ற மாவட்டங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டன. உணவகங்களில் காலை சிற்றுண்டி ஐந்து ரூபாய்க்கும், மதியம், இரவு உணவு பத்து ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
ஆரம்பத்தில் இந்திரா உணவகங்கள், ஏழைகள், நடுத்தர வர்க்கத்து மக்களுக்கு, அட்சய பாத்திரம் போன்று செயல்பட்டன. சுவையான, தரமான உணவு குறைந்த விலைக்கு கிடைத்ததால், வசதியானவர்களும் கூட உணவகங்களுக்கு வந்தனர்.
கடந்த 2018ல், அரசு மாறிய பின் இந்திரா உணவகங்களுக்கு, புதிய அரசு நிதியுதவி வழங்காததால் உணவங்கள் செயல்படுவது கஷ்டமாக இருந்தது.
அதன்பின் 2023ல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்து, சித்தராமையா முதல்வரானார். இந்திரா உணவகங்களை சீரமைப்பதில் ஆர்வம் காட்டினார்.
பெங்களூரு உட்பட அனைத்து மாவட்டங்களிலும் உணவகங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம் வகுத்தார். அது மட்டுமின்றி உணவு மெனுக்களை மாற்றி, சப்பாத்தி, கேழ்வரகு களி, மங்களூரு பன், பிரட் ஜாம் என, உணவு மெனுக்கள் மாற்றப்படும் என, முதல்வர் சித்தராமையாவும், உணவுத்துறை அமைச்சர் முனியப்பாவும் கூறினர். அவர்கள் உறுதியளித்து ஓராண்டு ஆகியும், இன்னும் உணவு மெனுக்கள் மாறவில்லை.
இதற்கு முன் இந்திரா உணவகங்களை நிர்வகிப்பும் பொறுப்பை, 'ஷெப் டாக்' நிறுவனம் ஏற்றிருந்தது. இந்நிறுவனம் சரியாக நிர்வகிக்கவில்லை. உணவும் தரமாக, சுகாதாரமாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்நிறுவனத்துடன் டெண்டர் முடிந்ததும். 'ரிவார்டு' என்ற நிறுவனத்துக்கு டெண்டர் அளிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் மாறியதால், இந்திரா உணவகங்களில் பல விதமான உணவு கிடைக்கும் என, வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இதுவரை எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
தற்போது உணவகங்கள் பெயரளவுக்கு செயல்படுவதாக கூறப்படுகிறது. சரியான நிர்வகிப்பு இல்லாமல், ஒவ்வொரு உணவகங்களாக மூடப்படுகின்றன.