தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ அணைகள் பாதுகாப்பு தேசிய கடமை முதல்வர் சித்தராமையா பேச்சு

 அணைகள் பாதுகாப்பு தேசிய கடமை முதல்வர் சித்தராமையா பேச்சு

 அணைகள் பாதுகாப்பு தேசிய கடமை முதல்வர் சித்தராமையா பேச்சு


ADDED : பிப் 14, 2026 04:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 04:58 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''அணைகளை பாதுகாக்க முறையான ஆய்வு செய்வது அவசியமாகும். அணை பாதுகாப்பு என்பது ஒரு துறையின் பொறுப்பு அல்ல; தேசிய கடமை,'' என, முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.

மத்திய ஜல்சக்தி துறை சார்பில், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தின் ஜே.ஜே.டாடா ஆடிட்டோரியத்தில், சர்வதேச அணை பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது.

இதில், துணை முதல்வர் சிவகுமார் பேசியதாவது:

பெங்களூரின் மக்கள் தொகை, 1.50 கோடியாக உள்ளது. உலகம் முழுதும் உள்ள தொழில் அதிபர்கள், பெங்களூரை நோக்கி தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். பெங்களூரு வழியாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. இங்குள்ள காலநிலை, கலாசாரம் அனைவரையும் ஈர்க்கிறது.

பெங்களூருக்கு வருவோருக்கு தண்ணீர் வழங்குவது எங்கள் பொறுப்பு. எனவே, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்து உள்ளோம். திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். அவர்கள் அனுமதி அளித்தால் திட்டத்தை செயல்படுத்துவோம். பெங்களூரு மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்கவும், 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கவும் இந்த திட்டம் உதவும்.

அணைகள் நாட்டின் வலிமைக்கான சின்னம். விவசாயிகளுக்கு ஆதாரமாக இருக்கும், அணைகளை பாதுகாக்க வேண்டும். நமது நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள் பல ஆண்டுகள் பழமையானவை. இதனால், அணைகளில் உட்கட்டமைப்பு பணிகள் செய்வது அவசியம். கணிக்க முடியாத வானிலையால், அணைகளை சீரமைப்பது சவாலாக உள்ளது. இந்தியாவில் 6,500 அணைகளும், கர்நாடகாவில், 232 அணைகளும் உள்ளன. அணைகளை பாதுகாத்து நாட்டை பிரகாசிக்க செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முதல்வர் சித்தராமையா பேசியதாவது:

அணைகளை பாதுகாக்க முறையான ஆய்வு செய்வது அவசியமாகும். அணைகள் பாதுகாப்பு என்பது ஒரு துறையின் பொறுப்பு அல்ல; தேசிய கடமை. வண்டல் மண் படிதல், சுற்றுச்சூழல் பாதிப்பு, நீண்டகால சேமிப்பு திறன் போன்றவை அணைகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அணைகள் பாதுகாப்பு தற்போது டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இதனால், சைபர் பாதுகாப்பு, தொழில்நுட்ப நாசவேலைகளில் இருந்து அணைகளை பாதுகாக்க வேண்டும். கர்நாடகாவில் கிருஷ்ணா, காவிரி ஆறுகளுக்கு நடுவில் கட்டப்பட்ட அணைகள், விவசாயிகளுக்கு பெரும் பலன் அளிக்கின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us