ADDED : அக் 11, 2025 11:06 PM

சிக்கபல்லாபூர்: தந்தையின் இறந்ததால் மனம் நொந்த மகள், தற்கொலை செய்து கொண்டார்.
சிக்கபல்லாபூர் மாவட்டம், கவுரிபிதனுார் நகரின் நாகிரெட்டி லே - அவுட்டில் வசித்தவர் சுவர்ணா, 22. இவர் பெங்களூரின் மஹாராணி கல்லுாரியில் எம்.எஸ்.சி., படித்தார்; விடுதியில் தங்கியிருந்தார். இவரது தந்தை மூன்று மாதங்களுக்கு முன்பு காலமானார். திடீரென தந்தையை இழந்ததால், சுவர்ணா மனம் நொந்தார்.
இதனால், நேற்று முன் தினம், கல்லுாரி விடுதியில், எலி மருந்தை தின்று உள்ளார். பின்னர் ஊருக்கு சென்றார். தன் தாயிடம் விஷயத்தை கூறி உள்ளார். உடனடியாக சிக்கபல்லாபூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
தந்தையும், அக்காவும் இறந்ததால் சுவர்ணாவின் தம்பியும் மனதளவில் நொந்துள்ளார். இதை உணர்ந்த தாய், மகனுக்கும் ஏதாவது ஆகிவிடுமோ என, கவலையில் ஆழ்ந்துள்ளார்.
பெங்களூரின் ஹைகிரவுண்ட் போலீசார், சிக்கபல்லாபூர் சென்று, சுவர்ணாவின் தாயிடம் விசாரித்தனர்.