/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தவருக்கு கொலை மிரட்டல்
/
காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தவருக்கு கொலை மிரட்டல்
காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தவருக்கு கொலை மிரட்டல்
காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தவருக்கு கொலை மிரட்டல்
ADDED : மார் 29, 2025 05:28 AM
சிக்கமகளூரு : வேறு மதத்தைச் சேர்ந்த காதல் ஜோடிக்கு திருமணம் செய்து வைத்தவருக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக வழக்கு பதிவாகி உள்ளது.
சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளியைச் சேர்ந்தவர் மகேஷ். கோபி மஞ்சூரியன் கடை நடத்துகிறார். இவரது கடையில் வேறு மதத்தைச் சேர்ந்த இளம்பெண், வாலிபர் வேலை செய்தனர். அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. காதலுக்கு இளம்பெண் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கடந்த 24ம் தேதி காதல் ஜோடி, சார் - பதிவாளர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டது. இந்த திருமணத்திற்கு மகேஷ், அவரது நண்பர்கள் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்.
இதையடுத்து மகேஷை மொபைல் போனில் தொடர்பு கொண்டு சிலர் பேசி உள்ளனர். 'லவ் ஜிகாத்'துக்கு உடந்தையாக உள்ளாயா, நீ மத வெறியனா என்று கேட்டு ஆபாசமாக திட்டியதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து மகேஷ் அளித்த புகாரில், பசவனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.