வட கர்நாடகா வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் ஒதுக்க முடிவு
வட கர்நாடகா வளர்ச்சிக்கு கூடுதல் நேரம் ஒதுக்க முடிவு
UPDATED : நவ 22, 2026 12:00 AM
ADDED : நவ 21, 2026 11:52 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: ‘‘பெலகாவி குளிர் கால கூட்டத்தொடரில் இம்முறை, வட மாவட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து அதிக நேரம் விவாதம் நடத்த அரசுடன் ஆலோசனை செய்யப்படும்,’’ என, சட்டசபை சபாநாயகர் ஜி.கே.பாட்டீல் தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று சட்டசபை சபாநாயகர் ஜி.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
இந்தாண்டு பெலகாவி குளிர்கால கூட்டத்தொடர் டிச., 2ம் தேதி முதல் 11ம் தேதி வரை ஒன்பது நாட்கள் நடக்கிறது.
கடந்தாண்டு வட மாவட்டங்கள் வளர்ச்சி பணிகள் குறித்து 21 மணி நேரம் மட்டுமே விவாதிக்கப்பட்டது.
இந்தாண்டு கூடுதல் நேரம் விவாதிப்பது குறித்து அரசுடன் ஆலோசனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
