/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கித்வாய் மருத்துவமனையில் புதிய 'பிளாக்' கட்ட முடிவு
/
கித்வாய் மருத்துவமனையில் புதிய 'பிளாக்' கட்ட முடிவு
கித்வாய் மருத்துவமனையில் புதிய 'பிளாக்' கட்ட முடிவு
கித்வாய் மருத்துவமனையில் புதிய 'பிளாக்' கட்ட முடிவு
ADDED : அக் 14, 2025 04:49 AM

பெங்களூரு: கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையின் சேவையை விரிவுபடுத்தும் நோக்கில், விரைவில் 450 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட, மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் கூறியதாவது:
தற்போது கித்வாய் புற்றுநோய் மருத்துவமனையில், 720 படுக்கைகள் உள்ளன. ஆனால், சமீப காலமாக நோயாளிகளின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
படுக்கைகள் பற்றாக்குறை உள்ளது. இதனால் நோயாளிகள் வேறு வழியின்றி, தனியார் மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
பண வசதி இல்லாத ஏழைகளால், தனியார் மருத்துவமனைக்கு சென்று, அதிகம் செலவு செய்து சிகிச்சை பெற முடியாது. இதை கருத்தில் கொண்டு, கித்வாய் மருத்துவமனையில், 450 படுக்கை வசதி கொண்ட, புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
புதிய கட்டடம் கட்டினால், ஏழை நோயாளிகள் கைக்கு எட்டும் கட்டணத்தில், சிகிச்சை பெற உதவியாக இருக்கும்.
பரிசோதனை செய்து கொள்ள வரும் நோயாளிகளை, இறுதி அறிக்கை வரும் வரை, மருத்துவமனையிலேயே தங்க வைக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரின் நோயாளிகளுக்கு தங்கும் இடத்தில் பிரச்னை இல்லை. தொலைவில் இருந்து வருவோருக்கு, தங்கும் வசதி செய்வது கட்டாயம்.
இவ்வாறு அவர் கூறினார்.