/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
36 பேரை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு
/
36 பேரை ஊரைவிட்டு வெளியேற்ற முடிவு
ADDED : ஜூன் 03, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மங்களூரு,: தட்சிண கன்னடா, மங்களூரில் பஜ்ரங் தள் முன்னாள் நிர்வாகி சுகாஸ் ஷெட்டி கடந்த மாதம் 1ம் தேதி கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, மங்களூரில் பதற்றம் நிலவியது.
இதை கருத்தில் கொண்ட போலீசார், பன்ட்வால் டவுன் போலீஸ் நிலையம், பன்ட்வால் ரூரல், விட்டலா, புஞ்சலகட்டே, பெல்தங்கடி, புத்துார் டவுன், புத்துார் ரூரல், கடபா, உப்பினங்கடி, சுள்யா, பெல்லாரே ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 36 பேரை ஊரை விட்டு வெளியேற்ற திட்டமிட்டு உள்ளனர். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.