/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் 3 மாதத்திற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு
/
பெங்களூரில் 3 மாதத்திற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு
பெங்களூரில் 3 மாதத்திற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு
பெங்களூரில் 3 மாதத்திற்கு ஒரு முறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த முடிவு
ADDED : ஆக 18, 2025 02:54 AM

ஸ்ரீராமபுரம் : கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம், பெங்களூரு ஸ்ரீராமபுரம் லிட்டில் பிளவர் பள்ளி, பெங்களூரு அரிமா கேபிடல், தமிழக அரசின் டான்சம் ஜி.சி.சி.,நிறுவனம் இணைந்து, ஸ்ரீராமபுரம் சாய்பாபாநகர் நலசங்க அரங்கில் நேற்று வேலை வாய்ப்பு முகாம் நடத்தியது.
முகாமை அரிமா சங்க 317ஏ மாவட்ட கவர்னர் டாக்டர் ஜி.மோகன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
லிட்டில் பிளவர் பள்ளி செயலர் அ.மதுசூதனபாபு தலைமையில் நடந்த முகாமில், கர்நாடக சிறு தொழில் சங்க பொருளாளர் ஆர்.துரை; டான்சம் ஜி.சி.சி., நிறுவன ஆலோசகர் டாக்டர் ஷாநவாஸ்கான், அரிமா சங்க நிர்வாகிகள் சாரதா மோகன், ராஜேஷ், அனிதா ஜெய்சங்கர், யோகலட்சுமி, மாலாஸ்ரீ, என்.ராமசந்திரன், எஸ்.நவீன், தொழில் அதிபர்கள் தர்மலிங்கம், சுரேஷ்குமார், கர்நாடக மாநில தி.மு.க., அமைப்பாளர் ந.ராமசாமி, தி.மு.க., இலக்கிய அணி செயலர் போர்முரசு கதிரவன், பாரதிதாசன் தமிழ் மறுமலர்ச்சி மன்ற தலைவர் மா.கார்த்தியாயினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஜி.மோகன் பேசியதாவது:
மனிதவளத்தை முறையாக பயன்படுத்துவதன் மூலம், குடும்பம், சமூக, நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். தொழில்நுட்பங்களை முறையாக கற்று தேர்ந்து, சொந்தமாக தொழில் செய்ய வேண்டும். வேலை செய்வோர் நாள் முழுதும் வேலையாட்களாக இருக்க கூடாது; தொழில்முனைவோராக உருவெடுக்க வேண்டும். அரசு திட்டங்களை இளைஞர்கள் முழுமையாக பயன்படுத்த வேண்டும்,'' என்றார்.
வேலை வாய்ப்பு முகாமில், பல படிப்புகள் பட்டம் பெற்ற 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 193 பேருக்கு வேலை உறுதி செய்யப்பட்டது. தமிழக அரசின் ஒத்துழைப்புடன், மூன்று மாதத்திற்கு ஒரு முறை பெங்களூரில் வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியை ஜே.என்.எல்.அறக்கட்டளை தலைவர் சித்ரா தொகுத்து வழங்கினார். கர்நாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்க பொருளாளர் க.தினகரவேலு வரவேற்றார். முனுசாமி நன்றி கூறினார்.