ADDED : ஜன 03, 2026 06:17 AM

- நமது நிருபர் -
அல்வா என்றாலே, வாயில் எச்சில் ஊறும். பாதாம் அல்வா, கோதுமை அல்வா என பலவிதமான அல்வா செய்கின்றனர். சோள மாவிலும் கூட சுவையான பாம்பே அல்வா செய்யலாம். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா.
தேவையன பொருட்கள்
l சோள மாவு- அரை கிலோ
l எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்
l சர்க்கரை-1 கிலோநெய்- அரை கிலோ
l சிவப்பு புட் கலர் - அரை ஸ்பூன்
l முந்திரிப்பருப்பு - அரை கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் அரை கிலோ சோள மாவு, 350 மி.லி., நீரை சேர்த்து கட்டிகள் இல்லாமல், நன்றாக பிசைந்து கொள்ளவும். அடுப்பை பற்ற வைத்து, அடி கனமான பாத்திரத்தை வைத்து, 700 மி.லி., தண்ணீர் ஊற்றி, அதில் சர்க்கரையை சேர்க்கவும். சர்க்கரை கரைந்ததும் சர்க்கரை நீரில், பாதி அளவை தனியாக எடுத்து வைக்கவும்.
பாத்திரத்தில் மிச்சமுள்ள சர்க்கரை நீரில், இரண்டு ஸபூன் நெய் ஊற்றி சோள மாவை போட்டு, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, 18 நிமிடம் வரை கலக்கவும். அதன்பின் தனியாக எடுத்து வைத்த சர்க்கரை நீரை சோளமாவு கலவையில் சேர்த்து கலக்கவும். அதன்பின் எலுமிச்சை சாறை சிறிது, சிறிதாக ஊற்றவும். மிச்சமுள்ள நெய்யை ஊற்றி, விடாமல் கிளறவும்.
அதன்பின் சிவப்பு புட் கலர் மற்றும் கால் கப் முந்திரிப்பருப்பை போட்டு, சில நிமிடங்கள் கிளறவும். அல்வா வாணலியில் ஒட்டாமல், திரண்டு வரும் போது, நெய் தடவிய தட்டில் கொட்டி சமன்படுத்தவும். அதன் மீது மிச்சமுள்ள முந்திரிப்பருப்பை துாவி அலங்கரிக்கவும். இதை ஐந்து மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அதன்பின் துண்டுகள் போட்டு, வீட்டினருக்கு பரிமாறவும். பாம்பே அல்வாவை அனைவரும் விரும்புவர்.

