தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஸ்பெஷல்/அறுசுவை/ இனிக்கும் பிரட் அல்வா!

 இனிக்கும் பிரட் அல்வா!

 இனிக்கும் பிரட் அல்வா!


ADDED : ஜூன் 26, 2026 10:45 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 10:45 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -

பொதுவாக வீடுகளில் பிரட் மீந்து விட்டால் அல்லது காய்ந்துபோனால் குப்பையில் வீசுவர். அது போன்று வீசியெறியாமல், சுவையான அல்வா செய்யலாம். வாயில் போட்டால் தொண்டையில் வழுக்கி கொண்டு செல்லும் பிரட் அல்வாவை எப்படி செய்வது என, பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

l பிரட் ஸ்லைஸ்கள் - 10

l நெய் - 1 கப்

l சர்க்கரை - 1 கப் (இனிப்புக்கு ஏற்ப)

l பால் - 1 கப்

l முந்திரி பருப்பு - கால் கப்

l திராட்சை - சிறிதளவு

l ஏலக்காய் பொடி - அரை ஸ்பூன்

செய்முறை

முதலில் பிரட் ஸ்லைஸ்களின் ஓரங்களை வெட்டி விட்டு, நடுப்பகுதியை சிறு, சிறு துண்டுகளாகவும், வாணலியை அடுப்பில் வைத்து, இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி, சூடானதும் பிரட் துண்டுகளை போட்டு பொன்னிறமாக வறுத்து, தட்டில் வைத்து கொள்ளவும்.

அதே வாணலியில், சர்க்கரையை போட்டு தண்ணீர் சேர்த்து, கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்த பின், வறுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை போட்டு, மிதமான தீயில் கிளறவும். பிரட் மென்மையனதும் மிச்சமுள்ள நெய்யை ஊற்றி, ஏலக்காய் பொடியை சேர்த்து, கை விடாமல் கிளறவும்.

அல்வா வாணலியில் ஒட்டாமல், சுருண்டு வரும் போது, நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சையை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறிய பின் பரிமாறவும், இதை தயாரிக்க 1-5 நிமிடங்கள் போதும்.

குட்டீஸ்கள் ஏதாவது சாப்பிட தரும்படி நச்சரிக்கும் போதோ, வீட்டுக்கு திடீர் விருந்தாளிகள் வரும் போதோ பிரட் அல்வா கை கொடுக்கும்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us