/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தடம் புரண்ட சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு
/
தடம் புரண்ட சரக்கு ரயில் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஏப் 16, 2025 08:53 AM

பெலகாவி: மீரஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால், ஐந்து மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெலகாவியில் உள்ள ஜிந்தால் தொழிற்சாலையின் இரும்பு தாதுக்களை ஏற்றிய சரக்கு ரயில், நேற்று காலை 6:00 மணிக்கு குஜராத் மாநிலம், மீரஜ்ஜுக்கு சென்று கொண்டிருந்தது. பெலகாவி நகரின் மிலிட்டரி மஹாதேவா கோவில் அருகே செல்லும் போது, ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன.
உடனடியாக ரயிலின் லோகோ பைலட், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். ஹூப்பள்ளியில் இருந்து, தடம் புரண்ட பகுதிக்கு வந்த ரயில்வே தொழிலாளர்களின், நான்கு மணி நேர முயற்சிக்கு பின், இரு பெட்டிகளை மீண்டும் தண்டவாளத்தில் நிறுத்தினர்.
இவ்வழியாக வர வேண்டிய ரயில் எண்: 07302 மீரஜ் - பெலகாவி ரயில், கட்டபிரபாவுடன் நிறுத்தப்பட்டன; அதுபோன்று, எண் 07303 பெலகாவி - மீரஜ் ரயில், கட்டபிரபாவில் இருந்து இயக்கப்பட்டன.
பெலகாவியில் இருந்து மாலை 6:00 மணிக்கு புறப்பட வேண்டிய ரயில் எண் 17303: பெலகாவி - மைசூரு விரைவு ரயில், இரவு 11:00 மணிக்கு புறப்பட்டது.
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'சரக்கு ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணைக்கு பின், காரணம் தெரியவரும்' என்றனர்.