/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தாய் மறைவால் விரக்தி: 18 வயது மகன் தற்கொலை
/
தாய் மறைவால் விரக்தி: 18 வயது மகன் தற்கொலை
ADDED : டிச 25, 2025 07:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முல்பாகல்: தங்கவயல், முல்பாகலின் தம்மரெட்டிபள்ளி கிராமத்தில் ராதா, 38 என்ற பெண், 20 நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மகன் அபிஷேக், 18, தாயின் மறைவை தாங்கிக் கொள்ள முடியாமல் சோகத்தில் மூழ்கியிருந்தார்.
இந்நிலையில், பயிர்களுக்கு தெளிக்க வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை நேற்று காலை எடுத்து சென்று, அவரது வயலில் வைத்து குடித்துள்ளார்.
அங்கு மயங்கி கிடந்தவரை, பக்கத்து வயலில் வேலை செய்தவர்கள் பார்த்து, மீட்டு கோலாரில் உள்ள ஜாலப்பா மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வாலிபர் உயிரிழந்தார்.

