ADDED : ஜூலை 16, 2026 11:54 PM

பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடா மனைவி சென்னமாவுக்கு, திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மு ன்னாள் பிரதமர் தேவகவுடா, 93, மனைவி சென்னம்மா, 87. கடந்த இரண்டு நாட்களாக சுவாச பிரச்னையால் அவதிப்பட்டு வந்ததா ல், பெங்களூரு வீட்டில் ஓய்வில் இருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, அவரின் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து, எச்.ஏ.எல்., சாலையில் உள்ள மணிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், இரண்டு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர்.
தற்போது அவரின் உடல் நிலை சீராக உள்ளதாகவும், தீவிரமான பிரச்னை எதுவும் இல்லை என்றும் மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டாக்டர்கள், அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
தகவல் அறிந்த மத்திய அமைச்சர் குமாரசாமி, மொபைல் போன் மூலம், அந்த மருத்துவமனை டாக்டரை தொடர்பு கொண்டு விபரம் கேட்டறிந்துள்ளார்.
