தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது வெடிகுண்டா?

அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது வெடிகுண்டா?

அடுக்குமாடி கட்டடத்தில் வெடித்தது வெடிகுண்டா?


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பெங்களூரில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தில் மர்மப் பொருள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வெடித்தது வெடிகுண்டா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

பெங்களூரு புலிகேசி நகர் ஜாமியா மசூதி ரோட்டில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி கட்டடத்தின் 4வது மாடியில், நேற்று முன்தினம் மாலை, பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது.

இதில், கட்டடத்தில் பணிபுரிந்த கூலி தொழிலாளர்கள் அலாவுதீன், சூரஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவ இடத்திற்கு புலிகேசிநகர் போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவு, பயங்கரவாத எதிர்ப்பு படை, உள்நாட்டு பாதுகாப்பு பிரிவினர் உள்ளிட்டோர் சென்று சோதனை நடத்தினர். இதுகுறித்து, உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே கூறுகையில், “இச்சம்பவம் தொடர்பாக முழுமையான அறிக்கை வரும் வரை, மக்கள் யாரும் தேவையின்றி அச்சப்பட வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம். சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட பொருட்கள் அனைத்தும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் வெளியான பின்பே, சரியான காரணம் தெரிய வரும்,” என்றார்.

பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமந்த் குமார் சிங் கூறியதாவது:

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரும் முன்னுக்குப்பின் முரணாக வாக்குமூலம் அளித்து உள்ளனர். டார்ச் லைட் போன்ற கருவியில் உள்ள பட்டனை அழுத்திய போது, மர்ம பொருள் வெடித்ததாக ஒருவர் கூறினார். இருப்பினும், வெடித்தது வெடிகுண்டா என தடயவியல் ஆய்வக அறிக்கை வந்த பின்பே தெரியவரும். அனைத்து கோணங்களிலும் விசாரணை நடக்கிறது. பண்டிகை காலம் என்பதால் அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், யாரும் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us