தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஷிவமொக்கா தசராவில் யானையால் பரபரப்பு

ஷிவமொக்கா தசராவில் யானையால் பரபரப்பு

ஷிவமொக்கா தசராவில் யானையால் பரபரப்பு


UPDATED : அக் 22, 2026 12:00 AM

ADDED : அக் 21, 2026 10:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 12:00 AM ADDED : அக் 21, 2026 10:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஷிவமொக்கா: ஷி வமொக்கா தசராவில் ஜம்புச வாரியின் போது, 650 கிலோ வெள்ளி அம்பாரியை சுமந்து சென்ற யானை, திடீரென மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மைசூரு தசரா போன்று, ஷிவமொக்காவிலும் தசரா கொண்டா டப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக, சாகர் என்ற யானை அம்பாரியை சுமந்து வந்தது. இந்தாண்டு சாகரின் காலில், காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, சக்ரேபைலு யானைகள் முகாமில் இருந்து வந்திருந்த, சோமண்ணா என்ற யானை, அம்பாரியை சுமந்து செல்ல தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று மதியம் கோட்டை சிவப்பநாயக்கா அரண்மனை முன்பிருந்து, அல்லம்மா பிரபு மைதானம் வரை ஜம்பு சவாரி நடந்தது. சோமண்ணாவுடன் சாகர், பகதுார் ஆகிய யானைகள் இடம் பெற்றிருந்தன. 650 கிலோ வெள்ளி அம்பாரியை சோமண்ணா யானை சுமந்து சென்ற து.

ஊர்வலம், கோட்டே ஆஞ்சநேயா சுவாமி கோவிலை கடந்து சென்றபோது, அங்கு கூடியிருந்த மக்களின் கூட்டம், அதிகமான சத்தம், கூச்சலை கேட்டு சோமண்ணா மிரண்டது. பயந்த அந்த யானை, பாகனின் கட்டுப்பாட்டை இழந்து, அங்கிருந்த வாசவி பள்ளியை நோ க்கி வேகமாக ஓடியது.

யானை ஓடி வருவதை பார்த்த பொது மக்கள், நாலாபுறமும் சிதறி ஓடினர். யானை ஓடும் வழியில், கார் ஒன்றையும் சேதப்படுத்தியது.

பின் பாகன்கள், உதவியாளர்கள், வனத்துறை அதிகாரிகள் பெரும் போராட்டத்துக்கு பின், யானையை சமாதானப்படுத்தி, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us