/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா 28 கொலைகள் செய்தாரா? சட்டசபையில் காங்., - பா.ஜ., காரசாரம்
/
சித்தராமையா 28 கொலைகள் செய்தாரா? சட்டசபையில் காங்., - பா.ஜ., காரசாரம்
சித்தராமையா 28 கொலைகள் செய்தாரா? சட்டசபையில் காங்., - பா.ஜ., காரசாரம்
சித்தராமையா 28 கொலைகள் செய்தாரா? சட்டசபையில் காங்., - பா.ஜ., காரசாரம்
ADDED : ஆக 19, 2025 02:21 AM
பெங்களூரு : 'முதல்வர் சித்தராமையா, 28 கொலைகள் செய்து உள்ளார்' என்று சமூக ஆர்வலர் மகேஷ் திம்மரோடி கூறியது தொடர்பாக, சட்டசபையில் காங்கிரஸ், பா.ஜ., உறுப்பினர்கள் இடையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கர்நாடக சட்டசபையில் பூஜ்ய நேரத்தில், எதிர்க்கட்சி தலைவர் அசோக் பேசியதாவது:
தர்மஸ்தலா வழக்கில் எஸ்.ஐ.டி., விசாரணை அமைக்க வேண்டும் என்று, முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த டீம் அழுத்தம் கொடுத்ததோ, அதே டீம் சித்தராமையா 28 கொலைகள் செய்ததாக கூறி உள்ளது.
அந்த நபர், முதல்வரை கொலைகாரன் என்று கூறி, 48 மணி நேரம் கடந்து விட்டது. இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசுக்கு கண், காது இல்லையா.
சட்டசபை கூட்டத்தொடர் நடக்கும் போதே, முதல்வர் மீது கொலை குற்றச்சாட்டு வருகிறது. இது என்ன குண்டர் அரசா.
முதல்வர் கொலை செய்தது பற்றி விசாரிக்க எஸ்.ஐ.டி., அமைக்கப்படுமா? குற்றச்சாட்டு கூறிய நபர் இடத்தை அடையாளம் காட்டுவதாக கூறினால், பள்ளம் தோண்டுவீர்களா. இதற்கு அரசு பதில் அளிக்க வேண்டும்.
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர்: முதல்வர் மீது குற்றச்சாட்டு கூறிய நபரை பற்றி இங்கு பேசி, அந்த நபரை பெரிய நபராக்கி விட வேண்டாம். அந்த நபர் மீது பல வழக்குகள் உள்ளன. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன்.
அவர் தண்டிக்கப்படுவதை உறுதி செய்வோம். இரக்கமின்றி அவர் மீது நடவடிக்கை எடுப்போம். எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை.
அரசு உதவியற்ற நிலையில் உள்ளது என்று நீங்கள் நினைக்கிறீர்களா.
(அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோரசாக 'ஆமாம்' என்றனர்)
பா.ஜ., - சுனில்குமார்: முதல்வர் மீதான கொலை குற்றச்சாட்டை அரசு ஏற்றுக்கொள்கிறதா. நீங்கள் அமைதியாக இருந்தால், குற்றச்சாட்டு உண்மையாகி விடும்.
பரமேஸ்வர்: நாங்கள் அமைதியாக இல்லை. தக்க பதிலடி கொடுப்போம்.
பா.ஜ., - சுரேஷ்குமார்: முதல்வர் கொலைகாரர் என்ற குற்றச்சாட்டு வரும் போது, அரசு உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால், அதை பார்த்து கொண்டு நாங்கள் அமைதியாக இருக்க வேண்டுமா?
துணை முதல்வர் சிவகுமார்: பா.ஜ., தேசிய பொது செயலர் மீதும் அந்த நபர் குற்றச்சாட்டு கூறி உள்ளார். அந்த நபரை பற்றி இங்கு பேசி, அவர்களை வளர்த்து விட வேண்டாம். உள்துறை அமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுப்பார்.
இவ்வாறு விவாதம் நடந்தது.
மதிய உணவு இடைவேளைக்கு பின், சட்டசபையில் பரமேஸ்வர் பேசுகையில், ''முதல்வர் சித்தராமையா 28 கொலைகளை செய்ததாக, மகேஷ் திம்மரோடி கூறி உள்ளார்.
' 'அவர் மீது நடவடிக்கை எடுக்க, போலீசாருக்கு உத்தரவிட்டு உள்ளேன். அந்த நபர், சித்தராமையாவை பற்றி நேற்று பேசவில்லை.
' 'கடந்த 2023ம் ஆண்டு மே 27ம் தேதி பேசி உள்ளார். அந்த நபர் மீது ஏற்கனவே, 18 வழக்குகள் உள்ளன.
' 'இரண்டு ஆண்டுக்கு முன்பு பேசிய வீடியோவை வைத்து, பா.ஜ., உறுப்பினர்கள் இப்போது பிரச்னை செய்வது ஏன்,'' என்று கேள்வி எழுப்பினார்.
பா.ஜ., - சதீஷ் ரெட்டி: தர்மஸ்தலாவில், 20 ஆண்டுக்கு முன்பு பெண்களை புதைத்ததாக கூறியது பற்றி, இப்போது ஒருவர் அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., அமைத்து உள்ளீர்கள்.
அப்படி என்றால் சித்தராமையா 28 கொலை செய்ததை பற்றி விசாரிக்க, எஸ்.ஐ.டி., அமைப்பீர்களா.
'இதற்கு ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இத்துடன் இந்த பிரச்னை முடிந்தது)