/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'தினமலர்' ஒரு சகாப்தம் எஸ்.எம்.பழனி புகழாரம்
/
'தினமலர்' ஒரு சகாப்தம் எஸ்.எம்.பழனி புகழாரம்
ADDED : செப் 07, 2025 10:55 PM

ஸ்ரீராமபுரம் : ''பவள விழா காணும் தினமலர் நாளிதழ் ஒரு சகாப்தம்,'' என்று, சமூக ஆர்வலர் எஸ்.எம்.பழனி புகழாரம் சூட்டியுள்ளார்.
பெங்களூரு ஸ்ரீராமபுரம் சுதா புக் சென்டர் உரிமையாளரும், சமூக ஆர்வலருமான எஸ்.எம்.பழனி வெளியிட்ட அறிக்கை:
பவள விழா காணும், 'தினமலர்' நாளிதழுக்கு எனது வாழ்த்துகள். நாட்டு நடப்புகளை மக்களுக்காக சேகரித்து தருவதிலும், ஆரம்பகாலம் முதல் தற்போது வரை தனது கொள்கையில் இருந்து மாறாமல் நடுநிலையாக செயல்படும் ஒரே பத்திரிகை.
காலம் மாறினாலும், தரத்தில் இன்று வரை மாறாமலும், வியாபாரத்திற்காக மலிவான செய்திகளை வெளியிடாமலும், மக்கள் நலனுக்கான செய்தி வழங்கும் பத்திரிகையாகவும் திகழ்கிறது. இது ஒரு பத்திரிகை மட்டுமல்ல; சகாப்தம்.
நிறுவனர் டி.வி.ஆர்., விட்டு சென்ற பணியை அடையாளம் மாறிவிடாமல், துணிவு, தொண்டு, துாய்மை ஆகிய மூன்றையும் துாக்கி பிடித்து, அநீதிகளை தட்டி கேட்கும் காவலனாய் பத்திரிகையை நடத்துகின்றனர்.
கடக்க வேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது. காலத்திற்கு ஏற்ப புதிய வடிவங்களை எடுக்கும் தினமலர், தனது உயர்ந்த நெறிகளில் இருந்து மாறாமல், தனது வாசகர்களுடன் கரம் கோர்த்து பயணத்தை தொடரும்.
பட்டினி கிடந்தாலும் பத்திரிகை வாங்கி படிக்காமல் இருக்க மாட்டோம்; இது வெட்டி செலவு அல்ல. விண்ணுயர்த்தும் மூலதனம் என தினமலர் நாளிதழை தவறாமல் வாங்கும் வாசகர்கள் இருக்கும் வரை, அதன் வெற்றி பயணம் என்றென்றும் தொடரும். பவள விழா காணும் தினமலர் தங்கமாய் பூத்து வைரமாய் மலர்ந்து மென்மேலும் பூத்துகுலுங்க வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.