தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/'தினமலர்' சேவை அளப்பரியது வாசகர் ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சி

'தினமலர்' சேவை அளப்பரியது வாசகர் ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சி

'தினமலர்' சேவை அளப்பரியது வாசகர் ஸ்ரீனிவாசன் நெகிழ்ச்சி


UPDATED : அக் 16, 2026 12:01 AM

ADDED : அக் 15, 2026 10:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 12:01 AM ADDED : அக் 15, 2026 10:34 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ' 'பிற மாநிலத்தில் இலவச நுாலகத்தை திறந்த, தினமலரின் சேவை அளப்பரியது,'' என, தினமலரின் நீண்ட கால வாசகரான ஸ்ரீனிவாசன் கூறினார்.

பெங்களூரு குயின்ஸ் சாலையில் இயங்கும் 'தினமலர்' அலுவலகத்தில் உள்ள, 'கடல் தாமரை புத்தகப் பூங்கா'விற்கு, பெங்., சி.வி.ராமன் நகரில் வசிக்கும் 'தினமலர்' வாசகர்களான ஸ்ரீனிவாசன், 74, - ஜெயலட்சுமி தம்பதி நேற்று வந்தனர். அவர்கள் தங்களிடமிருந்த 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை அன்பளிப்பாக தந்தனர்.

இதுகுறித்து ஸ்ரீனிவாசன் கூறியதாவது:

தமிழகத்தின் சென்னையே எங்கள் பூர்வீகம். பெங்களூரில் குடியேறி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. நாங்கள் இருவரும் பல ஆண்டுகளாக 'தினமலர்' வாசிக்கிறோம். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை படித்து உள்ளேன். எனது மனைவி என்னை விட ஏராளமான புத்தகங்கள் படித்து உள்ளார்.

இந்த புத்தகங்களை எல்லாம் என்ன செய்ய போகிறோம் என்ற தவிப்பில் இருந்தேன். அப்போது, கடல் தாமரை புத்தகப் பூங்கா குறித்து அறிந்து கொண்டேன். என்னிடம் இருந்த புத்தகங்கள் மற்றவர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும் என்பதற்காக நுாலகத்துக்கு அன்பளிப்பாக தந்து உள்ளேன்.

பிற மாநிலத்தில் இலவச நுாலகத்தை திறந்த, தினமலரின் சேவை அளப்பரியது. வாழ்க தினமலர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us